Thursday, December 31, 2015

65 அபூதர் அல்கிஃபாரி

அபூதர் அல்கிஃபாரி - أبو ذر الغفاري
ரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். மனைவியை அழைத்துச் சொன்னார் “யாராவது பயணிகள் வருகிறார்களா என்று பார். அவர்களிடம் என் மரணத்தைத் தெரிவி. என்னை நல்லடக்கம் செய்யச் சொல்”

நகருக்கு வெளியே மக்கள் அரவமற்ற ஒரு பாலைவனப் பகுதி அது. மேய்வதற்காக நடமாடும் ஒட்டகங்களைத் தவிர எப்பொழுதாவது கடந்து செல்லும் வணிகர் குழு, பயணிகளின் கூட்டம் போன்றவை மட்டுமே அந்தப் பாலைப் பெருவெளியின் நிசப்தத்தைக் கலைத்தன. அந்தப் பகுதியில் மனித நடமாட்டம் என்பதே, அது ஈராக்கிலிருந்து மக்கா செல்லும் பாதையில் அமைந்திருந்ததால்தான்.

64 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்
عبد الله ابن مسعود
ரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க, பழங்களைப் பறிப்பதற்காக அவர் மரமேறியிருந்தார். நபியவர்கள்தாம் அவரை மரமேறச் சொல்லியிருந்தார்கள்; ‘ஆகட்டும்’ என்று உடனே பழம் பறிக்கச் சென்றுவிட்டார் அந்தத் தோழர். நபியவர்களுடன் நிழல் போல் தொடர்ந்து நபியின் ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்துக்  கவனமுடன் நிறைவேற்றி அந்த இனிய சேவகத்திற்குத் தம்மை உட்படுத்தியிருந்தவர் அவர்.
அவருக்கு மிக மெலிந்த உருவம். அதற்கேற்பக் கால்களும் மிக ஒல்லியானவை. உயரமும் அப்படியொன்றும் பெரியதன்று. சராசரி அல்லது அதற்கும்கீழ். மொத்தத்தில் வனப்புமிக்கத் தோற்றமற்றவர். அப்படியான அவர் மரத்தின்மேல் நின்றிருந்தபோது அவரது கீழாடை விலகி மெல்லிய கால்கள் வெளிப்பட்டன. அவ்வளவு ஒல்லியான கால்களைக் கண்டதும் சில தோழர்கள் சிரித்துவிட்டனர்.

63 அல் பராஉ பின் மாலிக்

அல் பராஉ பின் மாலிக்
 البراء بن مالك
கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட நெருப்புக் கொக்கி, அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவைப் பற்றி இழுத்துக் கொண்டு மேலே உயர ஆரம்பித்தது. அதைப் பார்த்துவிட்டு படுவேகமாய் ஓடிவந்தார் அவருடைய சகோதரர்.
அது தஸ்தர் போர். நகரைச் சுற்றி வளைத்திருந்தது முஸ்லிம்களின் படை. பாரசீகர்கள் நகரின் உள்ளே சென்று பத்திரமாகத் தங்களை அடைத்துக்கொண்டுவிட, முஸ்லிம்கள் கோட்டையை முற்றுகையிட்டிருந்தனர். கோட்டை வாயிலின் உயர்ந்தோங்கிய சுவர்களுக்கு உட்புறமிருந்து பாரசீகர்கள் முஸ்லிம்களின்மேல் சரமாரியாக அம்பு மழை பொழிந்து கொண்டிருந்தனர். அது முஸ்லிம்களுக்கு பெருத்த உயிரிழப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தவிர, பாரசீகர்கள் மற்றொரு புது யுக்தியைக் கையாண்டனர். அதுதான் முஸ்லிம்களுக்குப் பெரும் சவாலாகவும் சோதனையாகவும் அமைந்த விஷயம்.

Monday, November 23, 2015

நபிகளார் காலத்து இளைஞர்களும் நாம் உருவாக்க வேண்டிய இளைஞர்களும்

நபிகளார் காலத்து இளைஞர்களும்
நாம் உருவாக்க வேண்டிய இளைஞர்களும் !

உலகில் எந்த ஒரு மாற்றத்தையும் முதலில் ஏற்றுக்கொள்பவர்கள் இளைஞர்கள்தான் !  எரிகின்ற நெருப்பு போல எதையும் பற்றிபரவும் வயது !அதனால்தான் எல்லாப் புரட்சிகளுக்கும் அவர்கள்தான் முன்னிற்கிறார்கள் !
அந்த இளைஞர்களை சரியாகப் பயன்படுத்துவதில்தான் ஒரு இயக்கத்தின், தலைமையின் வெற்றி இருக்கிறது!
அப்படி நபிகளார் உருவாக்கிய அந்த முதல் உம்மத் முற்றிலும் இளைஞர்களைக் கொண்டதாக  இருந்தது! அபுபக்கரைத் தவிர எங்களில் நரைத்த முடியுடைய எவருமில்லை எனும் அளவுக்கு இளைஞர்களால் நிரம்பி இருந்தது நபிகளாரின்  படை!  அதனால்தான் அன்றைய ரோம பாரசீகப் பேரரசுகள் அவர்களிடம் வீழ்ந்தன!  ஒரு  நூற்றாண்டுக்கு உள்ளாகவே  இந்த உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பில் அவர்கள் ஆட்சி செலுத்த முடிந்தது!

Sunday, October 18, 2015

மழையின போது தொழுவது எப்படி? َ

மழை பெய்து கொண்டிருக்கிறது இப்படியான நேரத்தில் சிரமங்களை மழையின போது் தொழுவது எப்படி? தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், துன்பங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் இறைவனை நிந்திப்பதையும், வாயார வசைபாடுவதையும் கண்கூடாகக் கண்டுவருகின்றோம்.
ஆனால் இப்படியான நேரங்களிலெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக சொல்லித் தந்துள்ளது. மார்க்கம் காட்டிய அடிப்படையில் நாம் நடக்கும் போது மழை காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுவதுடன் மார்க்கத்தின் கட்டளைகளையும் பின்பற்றிய நன்மையை பெற்றுக் கொள்ள முடியும்.
இரண்டு நேரத் தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.

Thursday, October 15, 2015

கணவன் மனைவி உறவின் புரிந்துணர்வு

கோபத்தின் உச்சத்தில் எல்லை மீறி கத்திய
பின்னும் உங்கள் துணை உங்களோடு இதமாக நடந்து
கொள்கிறார் என்றால் உங்களை விட வாழ்வில்
அதிஷ்டமான துணை பெற்றவர் யாருமேயில்லை.
கணவன் மனைவி என்ற உறவின் அடிப்படையே
புரிந்துணர்வு என்ற வார்த்தை தான்.ஓர்
துக்கத்தில் தோலில் சாய துன்பங்கள் மறந்து
போகுமே அப்பொழுது தான் வாழ்வின் உண்ணதமான
அன்பின் முக்கியம் உணரப்படுகிறது.

முஹர்ரம் மாதம் பற்றிய சில வழிகாட்டல்கள் ஆதாரங்களுடன்


முஹர்ரம் மாதம் வந்து விட்டால் வழிகெட்ட சீயாக்களுக்கு கொண்டாட்டம் தான்.. காரணம் மார்க்கம் என்ற பெயரில் வெட்டுக்குத்து ....இன்னும் பல அனாச்சாரங்களை அவர்களால் அரங்கேற்றப்படும். அதே போல் தரீகா வாதிகள் அவர்களும் பல அனாச்சாரங்களை இஸ்லாத்தின் பெயரால் முஹர்ரம் மாதத்தில் அரங்கேற்றுவார்கள் இப்படியான வழிகேட்டிலிருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..
மேலும் முஹர்ரம் மாதம் சிறப்பு என்ற பெயரில் பொய்யான ஹதீஸ்கள் உண்டு .போலியான வணக்க வழி பாடுகள் நிறையவே உண்டு அதிலிருந்து தவிர்ந்து தூய்மையான வழியான அல்-குர்ஆன் ஆதாரபூர்வமான ஹதீதின் அடிப்படையில் இம்முஹராம் மாதம் பற்றிய செய்திகளை அறிந்து படித்து தூய்மையாக அமல்கள் செய்வோமாக!

Thursday, September 17, 2015

இந்துச் சகோதரரின் 8 கேள்விகள்?

இந்த கேள்விகளுக்கே பதில் தர முடியாது,
இந்துச் சகோதரரின் 8 கேள்விகள்?
பதில் கிடைக்காத கேள்விகள்.
இஸ்லாமியர்களோடு நெடுநாட்களாக விவாதத்தில் ஈடுபட்டும், எனக்கு கீழ்கண்ட கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைத்த பாடில்லை. இந்த கேள்விகள் அவர்களுடைய இறைத்தூதர்களை குறித்தோ, வேடிக்கையான நம்பிக்கைகளையும், கதைகளையும் குறித்தோ அல்ல, மாறாக அம்மதத்தின் அடிப்படை கோட்பாடுகளை பற்றியது. அவர்களின் அஸ்திவாரத்தை குறித்தது.
1) இறைவனுக்கு உருவம் உள்ளதா /இல்லையா? இறைவனின் தன்மைகளை நம்மால் அறிவு கொண்டு அறிந்துக் கொள்ள முடியுமா ?

Monday, September 14, 2015

எப்பொழுது துஆ ஏற்கப்படும்

எப்பொழுது துஆ ஏற்கப்படும்
〽️〽️〽️〽️〽️〽️〽️〽️〽️
💥மழை பெய்யும் பொழுது கேட்க்கப்படும் துஆ.
💥பயணத்தில் இருக்கும் பொழுது கேட்க்கப்படும் துஆ.
💥பாங்கிற்கும் இகாமத்திர்கும் இடையே கேட்க்கப்படும் துஆ.
💥பர்ளு தொழுகைக்கு பிறகு கேட்க்கப்படும் துஆ
💥தொழுகையில் சுஜூதில் கேட்க்கப்படும் துஆ.
💥அநீதிக்கு உள்ளானவர் கேட்க்கப்படும் துஆ.

குர்பானி_ கொடுப்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டியவை

குர்பானி_ கொடுப்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டியவை

பங்கிடுதல் :

அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்!
(வறுமையிலும்) கையேந்தாமல், (இருப்பதை கொண்டு) திருப்தியாய் இருப்போர்க்கும்,
யாசிப்போர்க்கும் உண்ண கொடுங்கள்.அல் குர்ஆன் : (22-36).
எவ்வளவு நாட்களுக்குள் அறுத்து பலியிடவேண்டும்:

பெருநாள் மற்றும் அதற்க்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்குள் குர்பானி பிராணியை அறுத்து விடவேண்டும்.

தஸ்ரிகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் : ஜுபைர் இப்னு முத்இம் (ரலி),நூல்கள் : தாரகுத்னி (பாகம் 4) (பக்கம் 284).

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்பு

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. சாந்தியும் சமாதானமும் அவனுடைய தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், உலக முஸ்லீம்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

அல்லாஹ் நம்மீது கொண்டிருக்கும் கருணையின் காரணமாக நமது பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கும் அவனுடைய அருளை நாம் பெறுவதற்கும் பல சந்தர்ப் பங்களை நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றான். அந்த சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். இந்நாட்களின் சிறப்புகளை சொல்கின்ற பல குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் வந்துள்ளன.

Tuesday, September 01, 2015

துல் ஹஜ் மாதத்தின் படிப்பினை

துல் ஹஜ் மாதத்தின் படிப்பினை

மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 2:197).
அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்களில் ஒன்றாகியதுல்ஹஜ்எனும் இந்த ஆண்டுக்கான இறுதி மாதத்தைப் பெற்றுள்ளோம், அல்ஹம்து லில்லாஹ்!
இம்மாதத்தில் ரமலானுக்குப் பிறகு இரண்டாவது பெருநாளாகிய ஹஜ்ஜுப் பெருநாள்(ஈதுல் அழ்ஹா)எனும் தியாகத் திருநாளை, அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களுடைய ஈடற்ற தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.

பல்சுவை தகவல் களஞ்சியம்.: மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்.

பல்சுவை தகவல் களஞ்சியம்.: மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்.: ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்… அது உ...

Monday, June 22, 2015

தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு

இஸ்லாத்தின் பெயரால் நாம் எந்தக்
காரியத்தைச் செய்வதாக
இருந்தாலும் அக்காரியம்
திருக்குர்ஆனிலும் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும்
உள்ளபடி அமைந்திருக்க வேண்டும்.
திருக்குர்ஆனிலும் நபிவழியிலும்
இல்லாத காரியங்கள் இஸ்லாத்தின்
காரியங்களாக இருக்க முடியாது.
தொழுகை உள்ளிட்ட அனைத்து
வணக்க முறைகளையும் நமக்குக்
கற்றுத் தருவதற்காகவே நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்
அனுப்பினான். அவர்களும் தமது
பணியில் எந்தக் குறைவும்
வைக்காமல் முழுமையாக நமக்குச்
சொல்த் தந்தார்கள். அவர்கள் உயிருடன்
வாழும் போதே இம்மார்க்கத்தை
இறைவன் முழுமைப்படுத்தி
விட்டான்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை
உங்களுக்காக நிறைவு செய்து
விட்டேன்.
அல்குர்ஆன் 5:3
'நமது கட்டளையில்லாமல் எந்தச்
செயலையேனும் யாரேனும்
செய்தால் அது நிராகரிக்கப்படும்'
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (3243)
எனவே நமது தொழுகை
முறையும் நபிகள் நாயகம் (ஸல்)
காட்டித் தந்த வழியில் மட்டுமே
அமைய வேண்டும். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் இப்படித் தான்
செய்தார்கள் என்பது தெளிவாகத்
தெரியும் போது அதற்கு
மாற்றமாக எவ்வளவு பெரிய
மேதைகள், இமாம்கள் கூறினாலும்
அவற்றை நாம் நிராகரித்து விட
வேண்டும்.
மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)
தலைமையில் வெளியூர்
இளைஞர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்தனர்.
அவர்களை 20 நாட்கள் தம்முடன் தங்க
வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
அவ்விளைஞர்கள் திரும்பிச்
செல்லும் போது,
'என்னை எவ்வாறு தொழக்
கண்டீர்களோ அவ்வாறே நீங்களும்
தொழுங்கள்' எனக் கூறி
அனுப்பினார்கள்.
நூல்: புகாரி 631, 6008, 7246
நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய
வழியில் மட்டும் தான் நமது
தொழுகை அமைந்திருக்க
வேண்டும் என்பதை இதிருந்து
அறியலாம்.
புனித மிக்க ரமலான் மாதத்தில்
மக்கள் பேரார்வத்துடன் தராவீஹ்
தொழுகை' என்ற பெயரில் இருபது
ரக்அத் தொழுவதை வழக்கமாகக்
கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு ரமலான் மாதத்திலும்
தமிழகத்தின் பல ஊர்களில்,
இத்தொழுகை குறித்த கருத்து
வேறுபாடு காரணமாக
முஸ்லிம்கள் மத்தியில் சண்டைகள்
நடந்து, காவல் நிலையங்களில்
வழக்குகளும் பதிவாகும்
வேதனையளிக்கும் நிகழ்ச்சிகள்
நடந்து வருகின்றன.
இஸ்லாத்தின் உண்மை நிலையை
குர்ஆன் மற்றும் நபிவழியில் தக்க
ஆதாரங்களுடன் அறிந்து கொண்டால்
இந்த வேண்டாத நிகழ்வுகளைத்
தவிர்க்க இயலும்.
தராவீஹ் என்ற சொல்லே இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத
பல்வேறு தொழுகைகளும்,
அவற்றுக்கான பெயர்களும் ஹதீஸ்
நூல்களில் தெளிவாகக்
கூறப்பட்டுள்ளன.
இரவில் தொழப்படும்
தொழுகைக்குப் பல பெயர்கள்
சூட்டப்பட்டுள்ளன.
1. ஸலாத்துல் லைல் (இரவுத்
தொழுகை)
2. கியாமுல் லைல் (இரவில்
நிற்குதல்)
3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)
4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும்
தொழுகை)
ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில்
காணப்படுகின்றன.
ஆனால் தாரவீஹ் என்ற சொல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பயன்படுத்தியதாகவோ, தராவீஹ்
என்ற தொழுகையை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் தொழுததாகவோ
ஹதீஸ் நூற்களில்
குறிப்பிடப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
இரவுத் தொழுகையை நாம் ஆய்வு
செய்தால் ரமளானிலும் ரமளான்
அல்லாத காலங்களிலும் ஒரே
மாதிரியாகத் தான் தொழுதுள்ளனர்
என்பதை அறியலாம்.
மற்ற மாதங்களில் இரவுத் தொழுகை
தொழுவதற்கு மக்களுக்கு அவர்கள்
ஆர்வமூட்டியதை விட ரமளானில்
அதிக ஆர்வமூட்டியுள்ளனர்.
தஹஜ்ஜுத் எனும் இரவுத்
தொழுகையை மற்ற நாட்களில்
தொழாதவர்கள் ரமளானிலாவது
தொழுது நன்மையை அடைந்து
கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
ரமளானில் யார் நின்று
வணங்குகிறாரோ அவரது முன்
பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது
நபிமொழி.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 37, 2008, 2009
'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் தொழுகை
எவ்வாறு இருந்தது?' என்று
ஆயிஷா (ரலி) அவர்களிடம்
கேட்டேன். அதற்கு அவர்கள்,
'ரமாளானிலும், மற்ற
மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு
மேல் அதிகமாக்கியதில்லை.
நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்.
அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப்
பற்றியும் கேட்காதே! பின்னர்
நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்.
அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப்
பற்றியும் கேட்காதே! பின்னர்
மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'
என்று விளக்கம் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)
நூல்: புகாரீ 1147, 2013, 3569
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை
பற்றி அபூ ஸலமா கேள்வி
கேட்கிறார். அவரது கேள்வியே
ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் தொழுகை எவ்வாறு
இருந்தது என்பது தான். அவர் ரமளான்
தொழுகை பற்றியே கேள்வி
கேட்டிருந்தும் ஆயிஷா (ரலி)
அவர்கள், ரமளானிலும் ரமளான்
அல்லாத மாதங்களிலும் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் பதினொரு
ரக்அத்களுக்கு மேல்
தொழுததில்லை' என்று
விடையளிக்கிறார்கள்.
எனவே ரமளானில் தொழுவதும்
தஹஜ்ஜுத் தொழுகை தான்.
ரமளானுக்குத் தனித் தொழுகை
இல்லை. மற்ற மாதங்களில் தொழும்
அதே தஹஜ்ஜுத் தொழுகை தான்
ரமளானிலும் உள்ளது என்று
தெள்ளத் தெளிவாக, நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் இரவுத்
தொழுகையை நன்கு அறிந்த
அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி)
அவர்களே அறிவித்து விட்டனர்.
ரமளானில் சிறப்புத் தொழுகை
இல்லை என்று ஆயிஷா (ரலி)
தெரிவித்த பின் தராவீஹ்
தொழுகையை எங்கிருந்து
கண்டுபிடித்தார்கள்?
தஹஜ்ஜத் வேறு, தராவீஹ்
வேறு என்ற வாதம்
ரமளானிலும் மற்ற மாதங்களிலும்
ஒரே தொழுகை தான் என்று நாம்
மேற்கண்ட ஆதாரத்தையும்,
ரக்அத்களின் எண்ணிக்கை என்ற
தலைப்பில் எடுத்துக் காட்டவுள்ள
ஆதாரங்களையும் கண்ட பின்
உண்மையை ஒப்புக் கொள்ள
மறுக்கின்றனர். தராவீஹ் வேறு,
தஹஜ்ஜத் வேறு என்ற விசித்திரமான
வாதத்தை முன் வைக்கின்றனர்.
தஹஜ்ஜுத் என்பது எல்லா நாட்களும்
தொழ வேண்டிய தொழுகையின்
பெயர். ரமளான் மாதத்தில் தஹஜ்ஜுத்
தொழுகையுடன் தராவீஹ் என்ற
மற்றொரு தொழுகை உண்டு;
எனவே தஹஜ்ஜுத்துக்கான
ஆதாரத்தை தராவீஹ் தொழுகைக்கு
ஆதாரமாகக் காட்ட வேண்டாம்
எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
எனவே இது பற்றியும் விரிவாக
நாம் விளக்க வேண்டியுள்ளது.
தஹஜ்ஜுத் வேறு, தராவீஹ் வேறு
என்பதற்கு ஆதாரம் இருந்தால் அதை
முதலில் ஏற்பவர்களாக நாம்
இருப்போம்.
தஹஜ்ஜுத் வேறு, தராவீஹ் வேறு
என்று வேறுபடுத்திக் கூறக்
கூடியவர்கள் தராவீஹ்
தொழுகைக்கான ஆதாரத்தை
எடுத்துக் காட்ட வேண்டும். உலகம்
அழியும் வரை இத்தகைய
ஆதாரத்தை அவர்களால் எடுத்துக்
காட்டவே இயலாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தஹஜ்ஜுத் தொழுது விட்டு
ரமளான் மாதத்தில் மேலும் 20
ரக்அத்கள் தொழுதார்கள் என்று
ஆதாரத்தைக் காட்டாத வரை இந்த
வாதத்தை அறிவுடையோர் ஏற்க
மாட்டார்கள்.
நாங்கள் ரமளான் மாதத்தின் இருபத்தி
மூன்றாம் இரவில் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில்
ஒரு பகுதி வரை தொழுதோம்.
பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில்
இரவில் பாதி வரை தொழுதோம்.
பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர்
உணவு தவறிவிடும் என்று
நினைக்கும் அளவுக்குத்
தொழுதோம்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்
(ரலி)
நூல்: நஸயீ 1588
இதே கருத்து அபூதாவூத் 1167,
இப்னுமாஜா 1317, அஹ்மத் 20450
ஆகிய நூற்களிலும் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
இரவில் தொழ ஆரம்பித்து, ஸஹர்
கடைசி வரை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் ஒரு தொழுகையைத் தான்
தொழுதுள்ளனர் என்பது
இதிலிருந்து தெளிவாகிறது.

Friday, May 01, 2015

தொழிலாளரின் உரிமைகள், மற்றும் கடமைகள்

தொழிலாளரின் உரிமைகள், மற்றும் கடமைகள்
ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
உலகளாவிய ரீதியில் மே 01ஆம் திகதி தொழிலாளர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.
இஸ்லாம் பேசுகின்ற உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்ட நபியவர்கள் நடைமுறைப்படுத்திக்காட்டிய உரிமைகள் ஆகும். அவை ஏதோ ஓர் அரசினாலோ சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவை அல்ல. இஸ்லாம் அளித்திருக்கும் உரிமைகள் உலகளாவியவை; மனித குலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியவை. அந்த உரிமைகள் ஓர் இஸ்லாமிய அரசுக்குட்பட்ட எல்லையில் வாழ்ந்தாலும் சரி அதற்கு வெளியே வாழ்ந்தாலும் சரி. எந்த நிலைமையிலும் கடைபிடிக்க வேண்டியவையே!

மனித உரிமைகள் சாசனம் ஒன்றை இவ்வுலகில் முதலில் அறிமுகப்படுத்தியது இஸ்லாம். புதைகுழிக்குள் புதைந்து கிடந்த பெண்களின் கண்ணியத்தை உயிர்ப்பித்து தூக்கி நிறுத்தியது இஸ்லாம். கருத்துச் சுதந்திரத்துக்கு களமமைத்ததும் இஸ்லாம். உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் உரிமைகளையும் கடமைகளையும் வகுத்தளித்திருக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.

Tuesday, April 21, 2015

மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம்மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம்

வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அழ்ழாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அழ்ழாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.’ (அல்குர்ஆன் 09:36)
ரஜப் புனிதமிக்க மாதம்
ரஜப் என்பது இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் ஏழாவது மாதம் ஆகும். அம்மாதத்தினைப் பற்றி அருள்மறைக்குர்ஆன் குறிப்பிடும் போது வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அழ்ழாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அழ்ழாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அழ்ழாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!’ (அல்குர்ஆன் 09:36)

Wednesday, April 01, 2015

ஹதீஸ்களும் வஹியேஹதீஸ்களும் வஹியே

அல் குர்ஆன் வஹி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை ஆகவே தங்களை முஸ்லீம் என்று அடையாளப் படுத்தியுள்ள எவரும் அல்குர்ஆன் விஷயத்தில் சந்தேகம் கொண்டதில்லை, அல் குர்ஆன் எப்படி வஹியோ அதுபோல சுன்னாவும் வஹி என்பதை சிலர் நம்பிக்கைகொள்ளாமல் இருக்கிறார்கள்.இந்த மோசமான தன்மை சுன்னாவின் சில வற்றை மறுக்கவும்,சுன்னா முழுவதையும் மறுக்கவும் காரணமாக அமைகின்றன.
நபிகளாரின் சுன்னாவில் உள்ள தகவல்களை அல்லாஹ்வின் வஹி என நம்புவது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் உள்ள ஒன்றாகும்.
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ  إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 53 : 3,4)

நபிகளாரின் மார்க்கத்தின் பெயரால் சொன்ன அனைத்தும் வஹி என்று இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

Monday, March 30, 2015

அல் குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு மத்தியிலுள்ள தொடர்புஅல் குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு மத்தியிலுள்ள தொடர்பு

அல் குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு மத்தியிலுள்ள தொடர்பை மூன்று வகையில் பிரிக்கலாம் என இமாம் இப்னு கையிம் ரஹ் அவர்கள் இஅலாமுல் முவக்கியீன் (2/468) என்ற தனது நூலில் சொல்கிறார்.
1.       ஒரு தகவல் அல் குர்ஆனில் வந்துள்ள அதே நடையில் சுன்னாவிலும் இடம்பெறும்
அல் குர்ஆனில் பல இடங்களில் தொழுகையை நிலைநாட்டுங்கள்,ஜகாத் கொடுங்கள் என்று வந்துள்ளது. இது தொழுகை, ஜகாத் கடமை என்பதை தெளிவு படுத்துகிறது.
நபிகளாரின் சுன்னாவிலும் தொழுகை, ஜகாத் கடமை என்பதை தெளிவுபடுத்தி தகவல்கள் வந்துள்ளது.