Thursday, September 17, 2015

இந்துச் சகோதரரின் 8 கேள்விகள்?

இந்த கேள்விகளுக்கே பதில் தர முடியாது,
இந்துச் சகோதரரின் 8 கேள்விகள்?
பதில் கிடைக்காத கேள்விகள்.
இஸ்லாமியர்களோடு நெடுநாட்களாக விவாதத்தில் ஈடுபட்டும், எனக்கு கீழ்கண்ட கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைத்த பாடில்லை. இந்த கேள்விகள் அவர்களுடைய இறைத்தூதர்களை குறித்தோ, வேடிக்கையான நம்பிக்கைகளையும், கதைகளையும் குறித்தோ அல்ல, மாறாக அம்மதத்தின் அடிப்படை கோட்பாடுகளை பற்றியது. அவர்களின் அஸ்திவாரத்தை குறித்தது.
1) இறைவனுக்கு உருவம் உள்ளதா /இல்லையா? இறைவனின் தன்மைகளை நம்மால் அறிவு கொண்டு அறிந்துக் கொள்ள முடியுமா ?

Monday, September 14, 2015

எப்பொழுது துஆ ஏற்கப்படும்

எப்பொழுது துஆ ஏற்கப்படும்
〽️〽️〽️〽️〽️〽️〽️〽️〽️
💥மழை பெய்யும் பொழுது கேட்க்கப்படும் துஆ.
💥பயணத்தில் இருக்கும் பொழுது கேட்க்கப்படும் துஆ.
💥பாங்கிற்கும் இகாமத்திர்கும் இடையே கேட்க்கப்படும் துஆ.
💥பர்ளு தொழுகைக்கு பிறகு கேட்க்கப்படும் துஆ
💥தொழுகையில் சுஜூதில் கேட்க்கப்படும் துஆ.
💥அநீதிக்கு உள்ளானவர் கேட்க்கப்படும் துஆ.

குர்பானி_ கொடுப்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டியவை

குர்பானி_ கொடுப்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டியவை

பங்கிடுதல் :

அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்!
(வறுமையிலும்) கையேந்தாமல், (இருப்பதை கொண்டு) திருப்தியாய் இருப்போர்க்கும்,
யாசிப்போர்க்கும் உண்ண கொடுங்கள்.அல் குர்ஆன் : (22-36).
எவ்வளவு நாட்களுக்குள் அறுத்து பலியிடவேண்டும்:

பெருநாள் மற்றும் அதற்க்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்குள் குர்பானி பிராணியை அறுத்து விடவேண்டும்.

தஸ்ரிகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் : ஜுபைர் இப்னு முத்இம் (ரலி),நூல்கள் : தாரகுத்னி (பாகம் 4) (பக்கம் 284).

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்பு

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. சாந்தியும் சமாதானமும் அவனுடைய தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், உலக முஸ்லீம்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

அல்லாஹ் நம்மீது கொண்டிருக்கும் கருணையின் காரணமாக நமது பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கும் அவனுடைய அருளை நாம் பெறுவதற்கும் பல சந்தர்ப் பங்களை நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றான். அந்த சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். இந்நாட்களின் சிறப்புகளை சொல்கின்ற பல குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் வந்துள்ளன.

Tuesday, September 01, 2015

துல் ஹஜ் மாதத்தின் படிப்பினை

துல் ஹஜ் மாதத்தின் படிப்பினை

மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 2:197).
அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்களில் ஒன்றாகியதுல்ஹஜ்எனும் இந்த ஆண்டுக்கான இறுதி மாதத்தைப் பெற்றுள்ளோம், அல்ஹம்து லில்லாஹ்!
இம்மாதத்தில் ரமலானுக்குப் பிறகு இரண்டாவது பெருநாளாகிய ஹஜ்ஜுப் பெருநாள்(ஈதுல் அழ்ஹா)எனும் தியாகத் திருநாளை, அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களுடைய ஈடற்ற தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.

பல்சுவை தகவல் களஞ்சியம்.: மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்.

பல்சுவை தகவல் களஞ்சியம்.: மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்.: ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்… அது உ...