இந்துச் சகோதரரின் 8 கேள்விகள்?

இந்த கேள்விகளுக்கே பதில் தர முடியாது,
இந்துச் சகோதரரின் 8 கேள்விகள்?
பதில் கிடைக்காத கேள்விகள்.
இஸ்லாமியர்களோடு நெடுநாட்களாக விவாதத்தில் ஈடுபட்டும், எனக்கு கீழ்கண்ட கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைத்த பாடில்லை. இந்த கேள்விகள் அவர்களுடைய இறைத்தூதர்களை குறித்தோ, வேடிக்கையான நம்பிக்கைகளையும், கதைகளையும் குறித்தோ அல்ல, மாறாக அம்மதத்தின் அடிப்படை கோட்பாடுகளை பற்றியது. அவர்களின் அஸ்திவாரத்தை குறித்தது.
1) இறைவனுக்கு உருவம் உள்ளதா /இல்லையா? இறைவனின் தன்மைகளை நம்மால் அறிவு கொண்டு அறிந்துக் கொள்ள முடியுமா ?

//தனக்கு பிள்ளை இல்லை, பெற்றோர் இல்லை , தேவைகள் இல்லை, இணை இல்லை பசி இல்லை, தாகம் இல்லை, தூக்கம் இல்லை, சோர்வு இல்லை, அசதி இல்லை, மறதி இல்லை என மனிதனின் பலவீனங்கள் எதுவும் இல்லை என தன்னைப் பற்றிக் கூறும் இறைவன், எந்த இடத்திலும் தனக்கு உருவம் இல்லை என சொல்லவே இல்லை ! இறைவனின் தன்மைகள் குறித்து அவன் என்ன சொல்லி இருக்கிறானோ அந்தத் தனமைகளை அறிந்து கொள்ள முடியும் மற்றவற்றை அறிய முடியாது என்பதே இஸ்லாமிய நம்பிக்கை!//
2) கற்சிலைகளை வனங்காத‌ நீங்கள் காபாவை எதற்காக போற்றுகிறீர்கள் ? எதற்காக இந்திய முஸ்லீம்கள் மேற்கு நோக்கி தொழுகிறீர்கள் ? அல்லாவை ஒரு சிலையோடு இனை வைக்க முடியாது என்று நம்பும் நீங்கள், ஒரு திசையில் மட்டும் அல்லாவை வைக்கலாமா ?
//வணங்குவது வேறு போற்றுவது வேறு ! நாங்கள் காபாவை வணங்கவில்லை ! கஃபாவின் இறைவனையே வணங்க்குகிறோம்!
திசையையும் வணங்கவில்லை இந்தத் திசையை நோக்கி தன்னை வணங்கும் படி இறைவன் கட்டளை இட்டதால் வணங்குகிறோம் ! பள்ளியிலோ, ராணுவத்திலோ அணிவகுப்பு நடத்தும் போது ஏதேனும் ஒரு திசையை தான் நோக்க வேண்டுமே தவிர ஆளுக்கொரு திசையை நோக்குவது சரியாகுமா ? ஏதேனும் ஒரு திசையை நோக்கவேண்டும் எனில் அனைவரும் தங்கள் நாட்டை விரும்புவர் ! ஒரு நாட்டை முன்னோக்கவேண்டும் எனும் போது அனைவருக்கும் பொதுவான மனித இனத்தின் முன்னோடி ஆதமால் கட்டப்பட்ட உலகின் முதல் ஆலயத்தை திசையாக நோக்குவது சிறந்தது எனும் அடிப்படையில்தான் கஃபா முன்னோக்கும் திசையானது ! //
3) மெக்காவில் உள்ள அந்த மசூதி ஒரு கட்டிடம் அவ்வளவே ? அதை எதற்கு வீடு தோறும் மாட்டி வைத்துள்ளீர்கள். அந்த செங்கலும் மணலும் ஆன கட்டிடத்தை உங்கள் வீட்டில் மாட்டிவைத்து ஏன் இறைவனை கேவலப்படுத்துகிறீர்கள் ?
// வீடு தோறும் எல்லாம் மாட்டி வைப்பதில்லை ! விரும்புபவர்கள் மாட்டி வைத்திருப்பார்கள் ! ஏனெனில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் உருவப்படங்கள் வைப்பதில்லை ! தாங்கள் விரும்பும் ஒரு திருத்தலத்தை மாட்டி வைப்பதில் என்ன தவறு இருக்கிறது? அப்படியானால் கோவில் படங்களை மாட்டி வைத்திருப்பவர்கள் எல்லாம் கடவுளைக் கேவலப் படுத்ததான் வைத்துள்ளர்களா ? சட்ட்சைபை கட்டடத்தை மாட்டிவைப்பது முதலமைச்சரை கேவலப்படுத்தவா? அதை வணங்கினால்தான் அது தவறு! படத்தைமாட்டிவைத்திருப்பது தவறில்லை//
4) அரபி மொழியில் எதற்காக இறைஞ்சுகிறீர்கள் ? இறைவனுக்கு அரபி மொழிதான் தெரியுமா ? மற்ற மொழிகளில் இறைஞ்சினால் அவனுக்கு புரியாதா ? அருவமாய் இருக்கும் இறைவனுக்கு காது மட்டும் கேட்குமா ?
// அரபி மொழியில் தொழுகை மட்டும்தான் நடக்கும்! பிரார்த்தனை அவரவர் தான் கேட்க வேண்டும் அதை அவரவர் மொழியில் தான் கேட்கிறோம் !
//இறைவனுக்கு மொழி தேவையில்லை ஆனால் மனிதனுக்கு மொழி தேவை ! தொழுகைக்கான கட்டளைகளில் ஒரு யுனிட்டி வேண்டும் என்பதற்காக உலகம் முழுதும் ஓரே மொழியில் அமைக்கப் பட்டுள்ளது ! பழமொழி வீர்கள் உள்ள ராணுவ பயிற்சி வகுப்பில் லெப்ட் ரைட் என இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் கட்டளை போட்டால் சாத்தியமா ? அது போலத்தான் சர்வதேச மார்க்கமான இஸ்லாத்தில் உள்ளவர்கள் உலகில் எந்த மொழி பேசுகின்ற இடத்துக்கு சென்றாலும் எந்தக் குழப்பமுமின்றி கட்டளைகளை அரபியில் கேட்டு தொழ முடியும்எனும் காரனத்திற்காவே அன்றி சமஸ்கிருதத்தை போல் அரபி உயர்ந்த மொழி என்று இஸ்லாம் கூறவில்லை!
காது இருந்தால் தான் கேட்க முடியும் எனும் உங்கள் குறைவான அறிவுக்குள் இறைவனை அடக்க முடியாது ! மனிதன் கண்டு பிடித்த உயிரற்ற எத்தனையோ கருவிகள் உங்கள் குரலைக் கேட்டு பதி செய்து பதில் அளிக்கும் போது இறைவனால் கேட்க முடியாதா ?
உங்களின் பிராத்தனையை நான் செவியுறுகிறேன் என்னிடமே கேளுங்கள் என்று இறைவன் கூறுவதால் கேட்கிறோம் //
இன்னும் நிறைய கேள்விகள் வரிசையில் இருக்கின்றன ? முதலில் இந்த கேள்விகளுக்கே பதில் தர முடியாது, பிறகு எதற்கு இன்னும் கேள்விகள்.
சரி சரி என்னை குறித்து வசைப்பாடிவிட்டு உங்கள் இயலாமையை தனித்து கொள்ளுங்கள் நண்பர்களே ? இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதது போல் அமைதியாய் இருந்து விடுங்கள்.
நன்றி Siva :
//சகோதரரே இன்னும் எத்தனை கேள்விகள் வைத்தாலும் இஸ்லாத்தில் அதற்கு பதில் உண்டு ! ஏனெனில் இது படைத்தவன் மார்க்கம்! இன்னும் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்! //
-செங்கிஸ் கான்
[அடுத்த கேள்விகளும் பதிலும் அடுத்த பதிவில் ]

Comments

  1. Casino, Slots & Blackjack Reviews, Casinos & Games
    Casino, Slots & Blackjack reviews, casinos and games at DrMCD. Check out our casino 파주 출장샵 games and 김해 출장마사지 the slots, 순천 출장안마 table games, blackjack, poker & live dealer 안산 출장샵 tables. Rating: 4.2 · ‎3 하남 출장마사지 reviews

    ReplyDelete

Post a Comment