ஹதீஸ்களும் வஹியே



ஹதீஸ்களும் வஹியே

அல் குர்ஆன் வஹி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை ஆகவே தங்களை முஸ்லீம் என்று அடையாளப் படுத்தியுள்ள எவரும் அல்குர்ஆன் விஷயத்தில் சந்தேகம் கொண்டதில்லை, அல் குர்ஆன் எப்படி வஹியோ அதுபோல சுன்னாவும் வஹி என்பதை சிலர் நம்பிக்கைகொள்ளாமல் இருக்கிறார்கள்.இந்த மோசமான தன்மை சுன்னாவின் சில வற்றை மறுக்கவும்,சுன்னா முழுவதையும் மறுக்கவும் காரணமாக அமைகின்றன.
நபிகளாரின் சுன்னாவில் உள்ள தகவல்களை அல்லாஹ்வின் வஹி என நம்புவது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் உள்ள ஒன்றாகும்.
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ  إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 53 : 3,4)

நபிகளாரின் மார்க்கத்தின் பெயரால் சொன்ன அனைத்தும் வஹி என்று இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ
மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. (அல்குர்ஆன் 4 : 113)
இமாம் ஷாஃபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ் அல்குர்ஆனில் அல் கிதாப் என்கிறான் அது அல்குர்ஆனை குறிக்கும்,மேலும் அல்ஹிக்மா என்கிறான் நபிகளாரின் சுன்னாவே  அல்ஹிக்மா ஆகும் என்கிறார்கள். (நூல்: அர்ரிஸாலா ,பக்கம் – 78)
மேலும் அல்ஹிக்மா என்பது நபிகளாரின் சுன்னாவையே
குறிக்கும் என்று இமாம் ஹசன் பஸரி, கதாதா, அபூ மாலிக் ஆகிய அறிஞர்களும் கூறுகிறார்கள். (நூல்: தப்ஸீர் இப்னு கஸீர்)
وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ  إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 33 : 34)
ويعني بالحكمة ما أوحى على رسول الله صلى الله عليه وسلم- من أحكام دين الله ولم ينزل به قرأن. وذلك السنة. جامع البيان: 22/9.
அல்குர்ஆனில் இறக்கப்படாமல் நபிகளாரின் மீது வஹியாக அறிவிக்கப்பட்ட மார்க்கசட்டங்களே அல்ஹிக்மா ஆகும் அது நபிகளாரின் சுன்னாவையே குறிக்கிறது. (நூல் : ஜாமியுல் பயான்)
நபிகளாரும் சுன்னா தனக்கு வஹியாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தும்விதமாக கூறினார்கள்.
عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَلَا إِنِّي أُوتِيتُ الْكِتَابَ، وَمِثْلَهُ مَعَهُ
நபிகளார் கூறினார்கள் அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் குர்ஆனும் அதைப்போன்றதும் (ஹதீஸும்) சேர்த்தே வழங்கப்பட்டுள்ளேன். (நூல் : அபூ தாவுத் – 4604)
ஹதீஸ்களும் நபிகளாருக்கு வஹியாக தரப்பட்டுள்ளது என்பதற்க்கு மற்றொரு ஹதீஸையும் ஆதாரமாகக் கூறலாம்.
أَنَّ يَعْلَى قَالَ لِعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَرِنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يُوحَى إِلَيْهِ، قَالَ: " فَبَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجِعْرَانَةِ، وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ، جَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ، وَهُوَ مُتَضَمِّخٌ بِطِيبٍ، فَسَكَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاعَةً، فَجَاءَهُ الوَحْيُ، فَأَشَارَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى يَعْلَى، فَجَاءَ يَعْلَى وَعَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ، فَأَدْخَلَ رَأْسَهُ، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْمَرُّ الوَجْهِ، وَهُوَ يَغِطُّ، ثُمَّ سُرِّيَ عَنْهُ، فَقَالَ: «أَيْنَ الَّذِي سَأَلَ عَنِ العُمْرَةِ؟» فَأُتِيَ بِرَجُلٍ، فَقَالَ: «اغْسِلِ الطِّيبَ الَّذِي بِكَ ثَلاَثَ مَرَّاتٍ، وَانْزِعْ عَنْكَ الجُبَّةَ، وَاصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجَّتِكَ»
யஃலா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வரும்பொழுது எனக்குக் காட்டுங்கள் என்று உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருந்தபோது ஒருவர் வந்து இறைத்தூதர் அவர்களே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?“ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வந்தது. உமர்(ரலி) என்னை சைகை செய்து அழைத்ததும் நான் சென்றேன். நபி(ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத் துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?“ என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் உம் மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவுவீராக! தைக்கப்பட்ட உடைகளைக் களைவீராக! உம்முடைய ஹஜ்ஜில் செய்வது போன்றே உம்முடைய உம்ராவிலும் செய்வீராக!என்று கூறினார்கள். புகாரி : 1536.
இமாம் பக்ருத்தீன் அஜ்ஜர்கசீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் அல்குர்ஆன் வஹியாக இறக்கப்பட்டது போல நபிகளாரின் சுன்னாவும் வஹியாக இறக்கப்பட்டது என்பதற்க்கு இந்த ஹதீஸ் உறுதியான ஆதாரமாகும். (அல்பஹருள் முஹீத் ஃபீ உஸூலுல் ஃபிக்ஹ் – 8/251)
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، يُحَدِّثُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ ذَاتَ يَوْمٍ عَلَى المِنْبَرِ وَجَلَسْنَا حَوْلَهُ، فَقَالَ: «إِنِّي مِمَّا أَخَافُ عَلَيْكُمْ مِنْ بَعْدِي، مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَزِينَتِهَا» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَوَيَأْتِي الخَيْرُ بِالشَّرِّ؟ فَسَكَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقِيلَ لَهُ: مَا شَأْنُكَ؟ تُكَلِّمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ يُكَلِّمُكَ؟ فَرَأَيْنَا أَنَّهُ يُنْزَلُ عَلَيْهِ؟ قَالَ: فَمَسَحَ عَنْهُ الرُّحَضَاءَ، فَقَالَ: «أَيْنَ السَّائِلُ؟» وَكَأَنَّهُ حَمِدَهُ، فَقَالَ: «إِنَّهُ لاَ يَأْتِي الخَيْرُ بِالشَّرِّ، وَإِنَّ مِمَّا يُنْبِتُ الرَّبِيعُ يَقْتُلُ أَوْ يُلِمُّ، إِلَّا آكِلَةَ الخَضْرَاءِ، أَكَلَتْ حَتَّى إِذَا امْتَدَّتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلَتْ عَيْنَ الشَّمْسِ، فَثَلَطَتْ وَبَالَتْ، وَرَتَعَتْ، وَإِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَنِعْمَ صَاحِبُ المُسْلِمِ مَا أَعْطَى مِنْهُ المِسْكِينَ وَاليَتِيمَ وَابْنَ السَّبِيلِ - أَوْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَإِنَّهُ مَنْ يَأْخُذُهُ بِغَيْرِ حَقِّهِ، كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَيَكُونُ شَهِيدًا عَلَيْهِ يَوْمَ القِيَامَةِ»
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்எனக் கூறினார்கள். ஒருவர் இறைத்தூதர் அவர்களே! (செல்வம் என்ற) நன்மை தீயதை உருவாக்குமா?“ எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமானார்கள். உடனே அந்த நபரிடம், “என்ன ஆனது உம்முடைய நிலைமை? நீர், நபி(ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி(ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமாலிருக்கிறார்களே!எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?“ என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, “நன்மையானது தீயதை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகிற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்று விடுகின்றன. அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன... பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும், சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போன்றே உலகிலுள்ள) இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ... அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்ற வனாவான். மேலும், மறுமை நாளில் அச்செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்எனக் கூறினார்கள். புகாரி - 1465.

நபிகளாரிடம் யூதர்கள் வந்து கேட்ட கேள்விகள்
عَنْ أَنَسٍ، قَالَ: سَمِعَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ، بِقُدُومِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهْوَ فِي أَرْضٍ يَخْتَرِفُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي سَائِلُكَ عَنْ ثَلاَثٍ لاَ يَعْلَمُهُنَّ إِلَّا نَبِيٌّ: فَمَا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ؟، وَمَا أَوَّلُ طَعَامِ أَهْلِ الجَنَّةِ؟، وَمَا يَنْزِعُ الوَلَدُ إِلَى أَبِيهِ أَوْ إِلَى أُمِّهِ؟ قَالَ: «أَخْبَرَنِي بِهِنَّ جِبْرِيلُ آنِفًا»
அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (ஒத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது எட்டியது. உடனே அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்என்று கூறினார்கள். பிறகு, “1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?“ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்என்று கூறினார்கள். புகாரி  4480.

ஹஸ்ஸான் பின் அதிய்யா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ஜிப்ரீல் அலை அவர்கள் நபிகளாரிடம் அல்குர்ஆனை வஹியாகக் கொண்டு இறங்கியது போல சுன்னாவையும் வஹியாகக் கொண்டு இறங்கினார்கள். (நூல் : சுனன் அத்தாரமி – 599)

நபிமார்களின் கனவுகளும் வஹியின் வகைகளின் ஒன்றாகும்.
عَن سَمُرَةُ بْنُ جُنْدَبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرُّؤْيَا، قَالَ: «أَمَّا الَّذِي يُثْلَغُ رَأْسُهُ بِالحَجَرِ، فَإِنَّهُ يَأْخُذُ القُرْآنَ، فَيَرْفِضُهُ، وَيَنَامُ عَنِ الصَّلاَةِ المَكْتُوبَةِ»
ஸமுரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கனவில் கண்ட தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் குர்ஆனைக் கற்று தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்என்று விளக்கமளித்தார்கள். தொழாமல் உறங்குபவரின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான். புகாரி 1143.

மேலும் அல்லாஹ் நபிமார்களுக்கு எவ்வாறு வஹி அறிவிக்கிறான் என்பதைப் பற்றி அல்குர்ஆனில் கூறும்பொது!
وَمَا كَانَ لِبَشَرٍ أَن يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِن وَرَاءِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ  إِنَّهُ عَلِيٌّ حَكِيمٌ
அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன். அல்குர்ஆன் 42: 51

இம்மூன்று வழிகளிலும் நபிகளாருக்கு அல்லாஹ் அல்குர்ஆனை மூன்றாவது வழியான வானவர்களில் இருந்து ஒரு தூதரை (ஜிப்ரீல் அலை) அனுப்பி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.ஆனாலும் ஹதீஸ்கள் நபிகளாருக்கு அல்லாஹ் இம்மூன்று வழிகளிலுமே வழங்கப்பட்டுள்ளது.

Ø  வஹியின் மூலம் என்பது அல்லாஹ் வானவர்களை அனுப்பாமல் நபிகளாரின் உள்ளத்தில் சில எண்ணங்களை போடுவதை குறிக்கிறது.

Ø  திரைக்கு அப்பால் இருந்து என்பது அல்லாஹ் நபிகளாருடன் மிஅராஜின் பொது பேசியதை குறிக்கிறது. * மிஅராஜில் நடந்த அனைத்து தகவல்களும் ஹதீஸ்களில் மட்டுமே உள்ளன.

Ø  ஒரு தூதரைஅனுப்பி என்பது நபிகளாரிடம் வானவர்கள் வந்து சென்றதை குறிக்கும் * +ம் நபிகளாரிடம் ஜிப்ரீல் அலை வந்து இஸ்லாம்,ஈமான்,இஹ்சான் சம்மந்தப்பட்ட ஹதீஸ் புகாரி  50, சில யூதர்கள் கேள்வி கேட்ட போது ஜிப்ரீல் எனக்கு பதில் அளித்தார் என்ற ஹதீஸ் புகாரி  4480.

இதுவரை நபிகளாருக்கு ஹதீஸ்கள் வஹியாக அருளப்பட்டது தான் என்பதை அல்குர்ஆன் மற்றும் சுன்னாவில் இருந்து தெளிவாக அறிந்து கொண்டோம்.
நபிகளாருக்கு கூட அல்லாஹ்வின் மார்க்கத்தில் சுயமாக எந்த தீர்ப்பையும் கூறமுடியாது என்பதற்க்கு அல்குர்ஆனின் 66 -1 முதல் 4 வரை உள்ள வசனம்கள் தெளிவு படுத்துகின்றது
ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , “(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்என்று கூறினார்கள். எனவே, “நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?“ என்று தொடங்கிநீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.22 (இந்த 66:4 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) நீங்கள் இருவரும்என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும், ஹஃப்ஸா(ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (திருக்குர்ஆன் 66:3 வது வசனத்தில்) நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்என்பது இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதனை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கிறது.  புகாரி 5267.

நபிகளாரின் சுன்னாவும் வஹியாகும் என்பதற்க்கான ஆதாரங்களை இதுவரை தெரிந்து கொண்டோம் .

இரண்டு வஹிக்கும் இடையில் உள்ள வித்தியாசம்
1 அல்குர்ஆனில் உள்ள வார்த்தைகள் அல்லாஹ்வின் வார்த்தைகளாகும் அவ்வார்த்தைகள் மாற்றப்படாமல் அருளிய வடிவில் அப்படியே பாதுகாப்பதற்க்கு அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான்.
* ஹதீஸ்களும் அல்லாஹ்வின் வஹியாகும் அதிலுள்ள தகவல்களும்,சட்டங்களும் பாதுகாக்கப்படும் என்று அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான். என்றாலும் அதிலுள்ள வார்த்தைகள் பாதுகாக்கப்படும் என்பதற்கு அல்லாஹ் உத்தரவாதம் அளிக்கவில்லை.
2 அல்குர்ஆனை ஓதினால் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் என்று நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.
* ஹதீஸ்களை படித்தால் இவ்வளவு நன்மைகள் என்று நிர்ணயம்செய்யப்படவில்லை மாறாக ஹதீஸ்களை படித்து செயல் படுத்தினால் நன்மை கிடைக்கும்.
3 அல்குர்ஆனைப் போன்ற வசனங்களை கொண்டு வருவதற்க்கு சவால் விடப்பட்டுள்ளது.
* ஹதீஸுக்கு அவ்வாறு சவால் விடப்படவில்லை.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.....

Comments