Monday, September 14, 2015

குர்பானி_ கொடுப்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டியவை

குர்பானி_ கொடுப்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டியவை

பங்கிடுதல் :

அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்!
(வறுமையிலும்) கையேந்தாமல், (இருப்பதை கொண்டு) திருப்தியாய் இருப்போர்க்கும்,
யாசிப்போர்க்கும் உண்ண கொடுங்கள்.அல் குர்ஆன் : (22-36).
எவ்வளவு நாட்களுக்குள் அறுத்து பலியிடவேண்டும்:

பெருநாள் மற்றும் அதற்க்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்குள் குர்பானி பிராணியை அறுத்து விடவேண்டும்.

தஸ்ரிகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் : ஜுபைர் இப்னு முத்இம் (ரலி),நூல்கள் : தாரகுத்னி (பாகம் 4) (பக்கம் 284).

பெண்கள் அறுக்கலாமா?
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கபட்டபோது அதை சாப்பிடும் படி கட்டளையிட்டார்கள்.அறிவிப்பாளர் : கஅபு இப்னு மாலிக் (ரலி),நூல் : புகாரி (5504).

நபி (ஸல்) அவர்கள் கருப்பும் வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்துள்ளார்கள்.அதை தன் கையால் அறுத்தார்கள்.அப்போது பிஸ்மில்லாவும்,தக்பீரும் கூறினார்கள்அறிவிப்பவர் : அனஸ் (ரலி),நூல்கள் : புகாரி (5565)
முஸ்லிம் (3635).
நங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை கூர்மையாக்கி கொள்ளுங்கள்! விரைவாக அறுப்பதன் மூலம் அதற்க்கு நிம்மதியை கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் : ஷிதாத் இப்னு அவ்ஸ் (ரலி), நூல்கள்:
முஸ்லிம் (3615),
திர்மிதி (1329,
நஸயி (4329),
அபூதாவுத் (2432),
இப்னுமாஜா (3161),
அஹ்மத் (16490).

பிராணியை அறுக்கும்போது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதி என்ற துவாவை சிலர் ஓதுகின்றனர் இது தொடர்பாக வரும் ஹதீஸ்கள் பலவீனமானவை.

பாலூட்டும்_பிராணி :
ஒரு அன்சாரி தோழர் நபி ஸல் அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் தரும் ஆட்டை வேண்டாம் என உன்னை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அபு ஹுரைரா ரலி ,நூல் : முஸ்லிம் (3799).

கூட்டு_குர்பானி :
ஒட்டகம்,மாடு இவைகளை ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் நாங்கள் ஏழு பேர் விதம் கூட்டு சேர்ந்தோம்.அறிவிப்பாளர்: ஜாபீர் ரலி ,நூல் : முஸ்லிம் (2325).
எத்தனை_பிராணிகள்_கொடுக்க_வேண்டும் :

☝️நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது என்பது எவ்வாறு அமைந்து இருந்தது என அபு அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்காகவும்,தம் குடும்பத்திற்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்கள்.அவர்களும் உண்பார்கள்,பிறருக்கும் உண்ண கொடுப்பார்கள்.அறிவிப்பாளர் : அதா இப்னு யாசர்,நூல்கள் : திர்மிதி 1425,இப்னு மஜா (3147).
பிராணிகளின்_தன்மைகள்:
தெளிவாக தெரியும் நொண்டி,தெளிவாக தெரியும் பார்வை குறை,தெளிவாக தெரியும் நோய்,எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளை உடையவற்றை குர்பானி கொடுக்க கூடாது என்று நபி (ஸல்) ஆவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் : அல்பராயின் ஆசிப் (ரலி),நூல்கள் :
திர்மிதி (1417),
அபூதாவூத் (4293),
நசயீ (4294),
இப்னு மாஜா (3135),
அஹ்மத் (1777).
குர்பானியின்_நோக்கம் :அவற்றின் மாமிசங்களோ அவற்றின் ரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை.
மாறாக உங்களிடம் உள்ள இறை அச்சமே சென்றடையும்.
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை பெருமை படுத்திட இவ்வாறும் அதை அவன் உங்களுக்கு பயன்பட செய்தான்.
நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!அல்_குரான்(22:37
எப்போது_அறுக்க_வேண்டும்:

இன்றைய நாளில் முதலில் செய்வது தொழுகையாகும்.பிறகு நம் வீட்டிற்க்கு சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்கிறாரோ அவர் நமது நபி வழியில் நடந்து கொண்டார். யார் தொழுவதற்கு முன் அறுத்தாரோ அவர் தன குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்தி கொண்டார். அவருக்கு குர்பானியில் நன்மை எதுவும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபு புர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் தொழுமுன் அறுத்து விட்டார். அவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் முஸின்னாவை விட ஆறு மாத குட்டி உள்ளது (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக!
எனினும் உமக்கு முன் பிறகு வேறு எவருக்கும் இது (தொழும் முன் கொடுக்க) அனுமதி இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
]அறிவிப்பவர் : பரா ரலி,நூல்கள்:
புகாரி - 5560, முஸ்லிம் - 3627
குர்பானி_கொடுப்பவர்_பேனவேண்டியவை:
நங்கள் கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜி பிறையை கண்டால் குர்பானி கொடுக்கும் வரை நகம் முடியை வெட்ட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உம்மு ஸலாமா (ரலி),நூல்கள் : முஸ்லிம் (3655),
நஸயி (4285).குர்பானி_தோல் :
ஒரு ஒட்டகத்தை குர்பானி கொடுக்கும் பொறுப்பை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள்.
அதன் மாமிசத்தையும்,தோலையும் (அதன் மீது கிடந்த கயிறு சேனம் போன்றவற்றையும்) தர்மமாக வழங்குமாறும்,உரிப்பவர்க்கு கூலியாக அதில் இருந்து எதனையும் வழங்க கூடாது எனவும் கட்டளையிட்டார்கள்.
அதற்கான கூலியை தனியாக கொடுப்போம்.அறிவிப்பாளர் : அலி (ரலி),நூல்கள் : புஹாரி -1716,
முஸ்லிம் -23