அல் குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு மத்தியிலுள்ள தொடர்பு



அல் குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு மத்தியிலுள்ள தொடர்பு

அல் குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு மத்தியிலுள்ள தொடர்பை மூன்று வகையில் பிரிக்கலாம் என இமாம் இப்னு கையிம் ரஹ் அவர்கள் இஅலாமுல் முவக்கியீன் (2/468) என்ற தனது நூலில் சொல்கிறார்.
1.       ஒரு தகவல் அல் குர்ஆனில் வந்துள்ள அதே நடையில் சுன்னாவிலும் இடம்பெறும்
அல் குர்ஆனில் பல இடங்களில் தொழுகையை நிலைநாட்டுங்கள்,ஜகாத் கொடுங்கள் என்று வந்துள்ளது. இது தொழுகை, ஜகாத் கடமை என்பதை தெளிவு படுத்துகிறது.
நபிகளாரின் சுன்னாவிலும் தொழுகை, ஜகாத் கடமை என்பதை தெளிவுபடுத்தி தகவல்கள் வந்துள்ளது.

عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ "
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளதுஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 8.
2.       அல் குர்ஆன் மற்றும் சுன்னா ஆகிய இரண்டிலும் ஒரே கருத்தை தரும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
அல் குர்ஆனில் தெளிவாக கூறப்படாத தகவல்களை சுன்னாவில் தெளிவாக கூறப்பட்டிருக்கும்
அல் குர்ஆனில் பல இடங்களில் தொழுகையை நிறைவேற்றுங்கள்,ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள் என்று வந்துள்ளது.ஆனால் எப்படி தொழு வேண்டும்,எப்படி ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்ற தகவல் அல் குர்ஆனில் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் எப்படி தொழு வேண்டும்,எப்படி ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்ற தகவல்களை நபிகளார் சுன்னாவின் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي
நபிகளார் சொன்னார்கள் என்னை எவ்வாறு தொழக கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். புகாரி 631.
خُذُوا عَنِّي مَنَاسِكَكُمْ
நபிகளார் சொன்னார்கள் உங்களின் ஹஜ் செய்யும் முறையை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். அஹ்மத் 1479.
சுன்னா அல் குர்ஆன் வசனத்திலுள்ள தெளிவற்றதை தெளிவுபடுத்தியும்,பொதுவானவற்றை வரையறுத்தும்,எது குறித்தும் குறிப்பிடாதவற்றை குறிப்பிட்டும் கூறுகிறது.ஆக சுன்னா இல்லாமல் அல் குர்ஆன் வசனங்களை விளங்கவேமுடியாது.
3.       அல் குர்ஆனில் இல்லாத சில தகவல்கள் சுன்னாவில் மட்டுமே இருக்கும்.
அல் குர்ஆனில் ஒரே திருமண பந்தத்தில் ஒரு பெண்ணையும்அவளது உடன் பிறந்த சகோதரியையும் திருமணம் முடிப்பதைமட்டுமே ஹராம் என வந்துள்ளது. ஆனால் சுன்னாவில் ஒரே திருமண பந்தத்தில் ஒரு பெண்ணையும்அவளது சின்னம்மாவையும், அவ்வாறே ஒரே திருமண பந்தத்தில் ஒரு பெண்ணையும்அவளது மாமியையும் திருமணம் முடிப்பது ஹராம் என அல் குர்ஆனில் இல்லாத ஒரு தகவலை நபிகளார் சுன்னாவில் மட்டுமே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يُجْمَعُ بَيْنَ المَرْأَةِ وَعَمَّتِهَا، وَلاَ بَيْنَ المَرْأَةِ وَخَالَتِهَا»
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்““ (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 5109.
இவ்வாறு அல் குர்ஆனில் இல்லாத சில தகவல்கள் சுன்னாவில் மட்டுமே உள்ளது. இதுபோல தஜ்ஜாலை பற்றிய ஹதீஸ்கள் அல் குர்ஆனில் இல்லாமல் சுன்னாவில் மட்டுமே வந்திருந்தாலும் அவைகளை கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அல் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
مَّن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ
எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;.(4-80)
ஆனால் இன்று சிலர் ஒரு தகவல்  அல் குர்ஆனில் இல்லாமல் சுன்னாவில் மட்டுமே வந்தால் அவைகளை நம்ப மறுக்கிறார்கள்.அதில் சந்தேகம் கொள்கிறார்கள்.இவ்வாறு வந்துள்ள தகவல்களை நம்பாமல் இருப்பது வழிகேடாகும்.
மார்க்கத்தின் மூலாதாரங்கலான அல் குர்ஆன் வல் ஹதீஸில் அடிப்படை ஆதாரங்களில் ஒன்றான சுன்னாவை ஏற்க மறுப்பதும் அதனை புறக்கணிப்பதும் குஃப்ராகும்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.....

Comments