Monday, November 23, 2015

நபிகளார் காலத்து இளைஞர்களும் நாம் உருவாக்க வேண்டிய இளைஞர்களும்

நபிகளார் காலத்து இளைஞர்களும்
நாம் உருவாக்க வேண்டிய இளைஞர்களும் !

உலகில் எந்த ஒரு மாற்றத்தையும் முதலில் ஏற்றுக்கொள்பவர்கள் இளைஞர்கள்தான் !  எரிகின்ற நெருப்பு போல எதையும் பற்றிபரவும் வயது !அதனால்தான் எல்லாப் புரட்சிகளுக்கும் அவர்கள்தான் முன்னிற்கிறார்கள் !
அந்த இளைஞர்களை சரியாகப் பயன்படுத்துவதில்தான் ஒரு இயக்கத்தின், தலைமையின் வெற்றி இருக்கிறது!
அப்படி நபிகளார் உருவாக்கிய அந்த முதல் உம்மத் முற்றிலும் இளைஞர்களைக் கொண்டதாக  இருந்தது! அபுபக்கரைத் தவிர எங்களில் நரைத்த முடியுடைய எவருமில்லை எனும் அளவுக்கு இளைஞர்களால் நிரம்பி இருந்தது நபிகளாரின்  படை!  அதனால்தான் அன்றைய ரோம பாரசீகப் பேரரசுகள் அவர்களிடம் வீழ்ந்தன!  ஒரு  நூற்றாண்டுக்கு உள்ளாகவே  இந்த உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பில் அவர்கள் ஆட்சி செலுத்த முடிந்தது!

சொர்கத்திற்கு  நன்மாராயம் சொல்லப்பட்ட அறிவின் நுழைவாயில்  அலி [ரலி] இஸ்லாத்தை ஏற்றபோது 10 வயது ! 
சொர்க்கத்திற்கு நன் மாராயம் சொல்லப்பட்டவர் கார்ஜியாக்க்ளால் கொல்லப்பட்ட  சஹீது,  நால்வரில் ஒருவர், நல்லவர்  குலபாயே ராஷிதா உஸ்மான் இப்னு அஃ ப்பான் [ரலி]  இஸ்லாத்தை ஏற்றபோது  இளம் வயது !   !
ஏராளமான ஹதிகள் இன்றைக்கு நம் கையில் கிடைக்க காரணமாக இருந்தவர் மனன சக்திக்காக நபிகளாரால் பிரார்திக்கப்பட்ட அபூஹுரைரா [ரலி]  இஸ்லாத்தை ஏற்றபோது   25 வயது ! 
நபிகளாரின் கட்டளையை ஏற்று 17 நாட்களில் ஹீப்ரு அராமிக் கற்றுக் கொண்டு வந்து ஆச்சர்யப்படுத்தியவர்!   குரான் தொகுப்புக் குழுத்தலைவர் வஹி  எழுத்தாளர்  ஜைது  இப்னு தாபித் [ரலி]  இஸ்லாத்தை ஏற்ற போது   11 வயது!
தன்னை நபி என்ற பொய்யன் முசைலமாவிடம் அல்லாஹ்வின் தூதரின்  கடிதத்தை கொண்டு சென்று அவனால் இரு கால் இரு கை  வெட்டப்பட்டு  கிடந்த நிலையிலும் சஹாதத்தை முழங்கி ஷஹீதான ஹபிப் இப்னு சயீத் [ரலி]  அகபாக் கண்வாயிலே நள்ளிரவில் நபிகளாரின் கையில் உறுதி மொழி ஏற்றபோது வயது 7.
என் சமுதாயத்தின் நம்பிக்கையாளர் என்று நபிகளாரால் கூறப்பட்ட அபு உபைதா  பின் அல்  ஜர்ராஹ் [ரலி]  இஸ்லாத்தை ஏற்றபோது 13  வயது!
அண்ணலாரின் வளர்ப்பு மகன், திருக்குரானில் பெயர் கூறப்பட்ட ஒரே நபித் தோழர் ஜைத் இப்னு ஹாரிஸா [ரலி]  இஸ்லாத்தை ஏற்றபோது 15 வயது!
ஒவ்வொரு நபிக்கும் ஒரு உதவியாளர் உண்டு! எனது உதவியாளர் ஜுபைர் என்று நபிகளாரால் கூறப்பட்ட சொர்கத்திற்கு  நன்மாராயம் சொல்லப்பட்டசுபைர் இப்னு அவ்வாம் [ரலி]  இஸ்லாத்தை ஏற்றபோது 16  வயது ! 
எறியுங்கள் சஅதே  என் தாயும் தந்தையும் உங்களுக்கு  அர்ப்பணமாகட்டும்  என்று உஹதுப் போரில் நபிகளாரால் விளிக்கப்பட்ட ச அது  இப்னு அபி வக்காஸ் [ரலி] இஸ்லாத்தை ஏற்றபோது 17 வயது ! 
நடமாடும் சஹீது என்று நபிகளாரால் நன்மாராயம் சொல்லப்பட்ட தல்ஹா பின் உபைதுல்லாஹ் [ரலி]  இஸ்லாத்தை ஏற்றபோது 17 வயது ! 
அளப்பரிய செல்வத்தின் காரணாமாக தவழ்ந்தே சொர்க்கம் செல்வார் என்று நபிகளாரால் நன்மாராயம் சொல்லப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃ ப் [ரலி]  இஸ்லாத்தை ஏற்றபோது 17 வயது ! 
இஸ்லாத்தின் முதல் அழைப்பாளர் ! அன்னாளார் மதீனா வருவதற்கு முன்னரே தனது  அழைப்பு பணியால் ஒரு அரசையே உருவாக்கும் அளவுக்கு ஆதரவு திரட்டி வைத்து இருந்த  முஸ் ஹப் பின் உமைர் [ரலி]  இஸ்லாத்தை ஏற்றபோது 18 வயது ! 
என் சமுதாயத்தில் ஹலால் ஹராம் குறித்து அதிகம் அறிந்தவர் என்று நபிகளாரால் கூறப்பட்டவர், ஜகாத் மூலம் தானம்   வாங்க ஆளே இல்லை எனும் வரலாற்று சாதனையை ஏமனில் நிகழ்த்திய  ஆளுநர் முஆத் பின் ஜபல் [ரலி]   இஸ்லாத்தை ஏற்றபோது 18 வயது ! 
  மூத்தா போரில்  இரண்டு கைகளை இழந்த பின்னும் இஸ்லாமியச சேனையின்  கொடியை  நெஞ்சில் தாங்கி சஹீதான  இரு இறக்கைகளை உடையவர் என்று நபிகளாரால் புகழப்பட்ட ஜஃபர் பின் அபுதாலிப் [ரலி]  இஸ்லாத்தை ஏற்றபோது 22 வயது !
அசாதாரண நினைவுத் திறனால் மூன்றில் ஒரு பங்கு மார்க்க சட்டங்கள்   நமக்குக் கிடைக்க காரணமானவர் அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா [ரலி]  அவர்களின் இஸ்லாமிய வாழ்வு குழந்தை ப் பருவம் முதல்!
தொகுக்கப்பட்ட திருக்குரானின்   முதல்  பிரதியை  அமானிதமாக ஏற்றவர், உமர் ரலி அவர்களின் மகள்  உம்முல் முஃமீனீ ன்  அன்னை ஹப்ஸா [ரலி]  இஸ்லாத்தை ஏற்றபோது  இளம் வயது ! 
ஹிஜ்ரத்தின் போது தவ்ர் குகையில் இருந்த தந்தை அபூபக்ரு மற்றும் அண்ணலாருக்கு உணவு சுமப்பதற்காக உடையைக் கிழித்து கயிறாகக் கட்டியதால் இரண்டு வாருடையாள் என்று அழைக்கப்பட்ட அஸ்மா [ரலி]  இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை !
அன்னாளாரின் முதுகில் எதிரிகளால் ஏற்றப்பட்ட ஒட்டக குடலை அஞ்சாமல் ஓடி வந்து இறக்கியவர்    சொர்கத்துப் பெண்களின் தலைவி,  எனது ஈரல் குலை என்று நபிகளாரால் அழைக்கப்பட்ட அண்ணலாரின் அருமை மகள் பாத்திமா [ரலி] இஸ்லாத்தை ஏற்றபோது  இளம் வயது ! 
சிரியாவுக்கு புலம்பெயர்ந்த முதல் ஹிஜ்ரத்தில் பெண்கள் குழுவுக்கு தலைமை ஏற்று சென்ற அண்ணலாரின் அன்பு மகள் ருக்கையா [ரலி] இஸ்லாத்தை ஏற்றபோது  இளம் வயது ! 
உக்பா இப்னு ஆமிர் 14,
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் 15
அப்துல்லாஹ் இப்னு மசூத் 15
கப்பாப் இப்னு  அரத்  15
அக்ரம் இப்னு அபுல் அர்கம் 17
அபு மூசா அல் அஷ்கரி 19
சஅது இப்னு சயீத் 19
உத்மான் இப்னு ஹுவைரிஸ் 20
ரலியல்லாஹு  அன்ஹும் !
ஆனால் இன்றைய நமது இளையோரின் நிலை என்ன ?
மேற்கண்ட உண்மையான  வீரர்களை தங்களின் முன்னோடியாக எடுத்துக் கொள்ளாமல்   சினிமா, சீரியல், கிரிகெட், அரசியல் நாயகர்களை தங்கள்  முன்னோடியாக  எடுத்துகொண்டு, வீண் விளையாட்டுக்களிலும், வெட்டிப் பேச்சிலும்  கைபேசிகளிலும் கணினிகளிலும், தொ லைக்காட்சிகளிலும்    தங்கள் நேரத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்!   இவர்களை இதில் இருந்து மீட்டெடுத்து சரியான பாதை காட்டினால் உலகை வெல்லும் உன்னதமானவர்களாக உருவாக்க முடியும்! அடுத்த நூற்றாண்டில் அகிலம் இஸ்லாத்தின் வசமாகும்!
-செங்கிஸ் கான்
மும்பை முஸ்லிம் ஜமாத்தின்  மூன்றாம் நாள் மாநாட்டில் சகோதரா சிந்திப்பாயா எனும் தலைப்பில்  எனது உரையில் இருந்து ....