மழையின போது தொழுவது எப்படி? َ

மழை பெய்து கொண்டிருக்கிறது இப்படியான நேரத்தில் சிரமங்களை மழையின போது் தொழுவது எப்படி? தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், துன்பங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் இறைவனை நிந்திப்பதையும், வாயார வசைபாடுவதையும் கண்கூடாகக் கண்டுவருகின்றோம்.
ஆனால் இப்படியான நேரங்களிலெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக சொல்லித் தந்துள்ளது. மார்க்கம் காட்டிய அடிப்படையில் நாம் நடக்கும் போது மழை காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுவதுடன் மார்க்கத்தின் கட்டளைகளையும் பின்பற்றிய நன்மையை பெற்றுக் கொள்ள முடியும்.
இரண்டு நேரத் தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.

மழை நேரத்தில் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்திலும், மஃரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்திலும் தொழ முடியும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.
வகீஉ என்பவரின் அறிவிப்பில், நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),  நூல் : முஸ்லிம் (1272)
லுஹரையும், அஸரையும் சேர்த்து ஒரு நேரத்திலும், மஃரிபையும், இஷாவையும் சேர்த்து ஒரு நேரத்திலும் நபியவர்கள் தொழுததாக குறிப்பிடும் மேற்கண்ட செய்தியில். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அச்சமோ மழையோ இருக்கவில்லை என்பதிலிருந்து அச்சம் அல்லது மழை இருந்தால் மாத்திரம் தான் நபியவர்கள் சேர்த்துத் தொழுவார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.
மதீனாவில் இப்படி செய்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளதால் பயணிகளாக இல்லா விட்டாலும் ஜம்மு செய்து தொழலாம் என்பதை இதில் இருந்து அறியலாம்.
கடமையான தொழுகைகளை வீட்டிலும் தொழுது கொள்ள முடியும்.
மழை பெய்யும் நேரத்தில் கடமையான தொழுகைகளைப் பள்ளிக்கு வந்து நிறைவேற்றாமல் வீட்டிலேயே தொழுது கொள்வதற்கும் மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு “ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், “(கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் “ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : புகாரி (666)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளியில் தான் மக்கள் கூட்டாகத் தொழுது வந்தனர். தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவே சாதாரண நேரங்களில் பள்ளிக்கு வர வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகின்றது.
மழை நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்றால் கடமையான தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டியதில்லை என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.
எனவே மழைநேரத்தில் வீடுகளில் கடமையான தொழுகைகளைத் தனியாகவும் தொழுது கொள்ளலாம். வீட்டில் உள்ள நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவும் நிறைவேற்றலாம். என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இழப்புகள் ஏற்படும் போது என்ன செய்வது?
மழையின் காரணமாக வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு அழிவுகள், இழப்புகள் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் நாம் படைத்த இறைவனை மறந்து அவனுடைய வழிகாட்டல்களுக்கு மாற்றமாக நடக்கக் கூடாது. மாறாக இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْ--نَ

Comments