சுன்னாவின் வரைவிலக்கணம்



சுன்னாவின் (ஹதீஸ்) வரைவிலக்கணம்
நபிகளாரின் செய்திகளை குறிப்பிடுவதற்க்கு இஸ்லாமிய வழக்கிக் சுன்னா மற்றும் ஹதீஸ் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. சுன்னா என்பதற்க்கு அரபி அகராதியில் வழி அல்லது வழிமுறை என்று பொருள். ஹதீஸ் என்பதற்க்கு அரபி அகராதியில் புதியது,சொல் என்று பொருள்.
சுன்னா மற்றும் ஹதீஸ் அகராதி ரீதியாக வெவ்வேறான பொருளை தரக்கூடிய வார்த்தைகளாக இருந்தாலும் இஸ்லாமிய வழக்கில் சுன்னா மற்றும் ஹதீஸ் என்று குறிப்பிடும்பொது அவை இரண்டும் ஒரே பொருளையே தரும்.
ما أضيف إلى النبي صلى الله عليه وسلم من قول، أو فعل، أو تقرير، أو صفة.) تيسير مصطلح الحديث(
நபிகளாரின் சொல்,செயல்,அங்கீகாரம் மற்றும் பண்புகளை நபிகளார் வரை தொடர்புபடுத்துவது, (நூல் தைஸிருள் முஸ்தலகுல் ஹதீஸ் 1/9)
இஸ்லாமிய வழக்கில் சுன்னா மற்றும் ஹதீஸ் இவை இரண்டும் ஒரே பொருளை தந்தாலும் இவைகளுக்கு மத்தியில் சில வித்தியாசங்களும் இருக்கின்றன.ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டுமே நபிகளாரின் சுன்னா என்று கூறமுடியும்.பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை நபிகளாரின் சுன்னா என்று கூறமுடியாது.
அவ்வாறே சுன்னா எனும்போது நபிகளாரின் சொல்,செயல்,அங்கீகாரம் ஆகிய மூன்றை மட்டுமே குறிப்பிடப்படும் நபிகளாரின் பண்புகளைப் பற்றி குறிப்பிடப்படாது.
நபிகளாரின் சொல்,செயல்,அங்கீகாரம் மற்றும் பண்புகளைப் பற்றிய விபரங்களை தெரியப்படுத்தியே ஹதீஸ்கள் அனைத்தும் இருக்கும்.அத்தகைய ஹதீஸ்களின் விளக்கத்தை சுருக்கமாக காண்போம்
நபிகளாரின் சொல்லிற்க்கான உதாரணம்,
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ
நபிகளார் கூறினார்கள் செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே உள்ளன (புகாரி : 1)
الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ
நபிகளார் கூறினார்கள் அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன (புகாரி : 52)
இவ்வாறு நபிகளாரின் கூற்றுகளை தெரிவிக்கும் விதமாக சஹாபாக்கள் பல ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள்.
நபிகளாரின் செயலிற்க்கான உதாரணம்,
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ قَبْلَ أَنْ يُصَلِّيَ عَلَى رُطَبَاتٍ، فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ فَتُمَيْرَاتٌ، فَإِنْ لَمْ تَكُنْ تُمَيْرَاتٌ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ.
நபிகளார் பழுத்து வரும் பருவத்திலுள்ள பேரித்தம் பழங்களைக்கொண்டு நோன்பு திறப்பார்கள். அவை இல்லையென்றால் நன்கு பழுத்த பழங்களைக்கொண்டு நோன்பு திறப்பார்கள்.அதுவும் இல்லையென்றால் ஒரு சிரங்கை தண்ணீர் அள்ளி அருந்தி நோன்பு திறப்பார்கள். (திர்மிதி : 696)
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ «تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ، أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَمَضْمَضَ بِهَا وَاسْتَنْشَقَ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَجَعَلَ بِهَا هَكَذَا، أَضَافَهَا إِلَى يَدِهِ الأُخْرَى، فَغَسَلَ بِهِمَا وَجْهَهُ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَغَسَلَ بِهَا يَدَهُ اليُمْنَى، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَغَسَلَ بِهَا يَدَهُ اليُسْرَى، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَرَشَّ عَلَى رِجْلِهِ اليُمْنَى حَتَّى غَسَلَهَا، ثُمَّ أَخَذَ غَرْفَةً أُخْرَى، فَغَسَلَ بِهَا رِجْلَهُ، يَعْنِي اليُسْرَى» ثُمَّ قَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ
இப்னு அப்பாஸ்(ரலி) உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதைக் கொண்டு தம் முகத்தைக் கழுவினார்கள். அதாவது ஒரு கைத் தண்ணீர் எடுத்து அதன் மூலமே தம் வலக்கையைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கையால் தண்ணீர் அள்ளித் தம் இடக்கையைத் கழுவினார்கள். பின்னர் ஈரக் கையால் தம் தலையைத் தடவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தம் வலக்காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தம் இடக்காலில் ஊற்றிக் கழுவினார்கள். இப்படித்தான் நபிகளார் உளூச் செய்ய பார்த்தேன்என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்என அதாவு இப்னு யஸார்(ரலி) அறிவித்தார். புகாரி 140.
இவ்வாறு நபிகளாரின் செயல்களை தெரிவிக்கும் விதமாக சஹாபாக்கள் பல ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள்.
நபிகளாரின் அங்கீகாரத்திற்க்கான உதாரணம்,

عَنِ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ خَالِدَ بْنَ الوَلِيدِ، الَّذِي يُقَالُ لَهُ سَيْفُ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَيْمُونَةَ، وَهِيَ خَالَتُهُ وَخَالَةُ ابْنِ عَبَّاسٍ، فَوَجَدَ عِنْدَهَا ضَبًّا مَحْنُوذًا، قَدْ قَدِمَتْ بِهِ أُخْتُهَا حُفَيْدَةُ بِنْتُ الحَارِثِ مِنْ نَجْدٍ، فَقَدَّمَتِ الضَّبَّ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ قَلَّمَا يُقَدِّمُ يَدَهُ لِطَعَامٍ حَتَّى يُحَدَّثَ بِهِ وَيُسَمَّى لَهُ، فَأَهْوَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ إِلَى الضَّبِّ، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ النِّسْوَةِ الحُضُورِ: أَخْبِرْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدَّمْتُنَّ لَهُ، هُوَ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَنِ الضَّبِّ، فَقَالَ خَالِدُ بْنُ الوَلِيدِ: أَحَرَامٌ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لاَ، وَلَكِنْ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي، فَأَجِدُنِي أَعَافُهُ» قَالَ خَالِدٌ: فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيَّ
அல்லாஹ்வின் வாள்என்றழைக்கப்படும் காலித் இப்னு வலீத்(ரலி) அறிவித்தார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹுஃபைதா பின்த் ஹாரிஸ்(ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா(ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!என்று கூறினார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், “இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லைஎன்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். புகாரி 5391.

நபிகளாரின் முன்னிலையில் ஒரு விஷயம் நடந்துஅதை நபிகளார் தடுக்கவில்லைஎன்றால் அக்காரியம் நபிகளாரின் அங்கீகாரத்தில் அடங்கும்.அவ்வாறே நபிகளாரின் காலத்தில் இவ்வாறுதான் ஒரு விஷயத்தை செய்தோம் என்று குறிப்பிட்டு ஒரு ஸஹாபி சொன்னால் அதுவும் நபிகளாரின் அங்கீகாரத்தில் அடங்கும். என ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அது தடுக்கப்பட்ட விஷயமாக இருந்தால் அல்லாஹ் நபிகளாருக்கு வஹிமூலம் தெரியப்படுத்தி விடுவான்.எனவே அவ்வாறு தடுக்கப்படவில்லையெனில் அக்காரியமும் நபிகளாரின் அங்கீகாரத்தில் அடங்கும்.
இதற்கு உதாரணமாக,
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «كُنَّا نَشْرَبُ وَنَحْنُ قِيَامٌ، وَنَأْكُلُ وَنَحْنُ نَمْشِي عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» (احمد)
நாங்கள் நபிகளாரின் காலத்தில் நின்றவாறு நீர் அருந்தவும்,நடந்தவாறு உண்ணவும் செய்திருக்கிறோம். (அஹ்மத் 5874) *
*நின்றவாறு உண்ணுவதும்,பருகுவதும் அனுமதிக்கப்பட்ட செயலாகும்.என்றாலும் உற்கார்ந்து உண்ணுவதும்,பருகுவதும் விரும்பத்தக்க சுன்னத்தாகும்.
நபிகளாரின் பண்புகளுக்கான உதாரணம்,
عَنْ سَعْدِ بْنِ هِشَامِ بْنِ عَامِرٍ، قَالَ: أَتَيْتُ عَائِشَةَ، فَقُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَخْبِرِينِي بِخُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: " كَانَ خُلُقُهُ الْقُرْآنَ (احمد)
நான் ஆயிஷா ரலி அவர்களிடம் வந்து இறைநம்பிக்கையாளர்களின் தாயே! நபிகளாரின் குணநலன்களைப்பற்றி எனக்கு அறிவியுங்கள் என்றேன் நபிகளாரின் குணம் அல் குர்ஆனாக இருந்தது என்றார்கள் ஆயிஷா ரலி. அஹ்மத் 24601.
இவ்வாறு நபிகளாரின் குணநலன்களைப்பற்றியும்,அங்க அமைப்பின் தன்மையை பற்றியும் சில சஹாபாக்கள் ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்.....

Comments