குர்பானி_கொடுக்கும்_முறை

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) “நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் குர்பானி கொடுக்கிறவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். ஒருவர் தொழுகைக்கு முன்பே அறுப்பது
மாமிசத்திற்காக அறுக்கப்பட்டதாகும்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, “இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். நானும் என்னுடைய குடும்பத்தினரும் அண்டை வீட்டாரும் சாப்பிட்டு விட்டோம்” என்றார். அப்போது நபி(ஸல்) “அது மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்” என்று கூறினார்கள். அப்போது அவர் “இறைத்தூதர் அவர்களே! என்னிடம் சதைப்பற்றுள்ள இரண்டு ஆடுகளை விடச் சிறந்த, ஆறுமாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?“ என்று கேட்டார். “ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது” என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.

ஷஹீஹுல் புகாரி:983
குர்பானி கொடுப்பது வலியுறுத்தி சொல்லப்பட்ட சுன்னத்தாகும். குர்பானிக்கு அனுமதிக்கப்பட்ட பிராணியையே அறுக்க வேண்டும். ஹராமான பிராணி அறுக்க கூடாது.
***குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை:
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.
”நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)
ஆனால் ஒருவருக்கு முதல் 10 நாட்களுக்கு இடையில் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவர் எப்போது குர்பானிக் கொடுப்பதாக எண்ணிக் கொண்டாரா அப்போதிருந்து கொடுக்கும் வரை இவற்றை வெட்டக்கூடாது. ஏனென்றால் குர்பானி கொடுப்பதாக அவர் முடிவெடுக்கும் போது தான் இந்தத் தடை ஏற்படும்.
குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். இவர் மட்டும் நகம் முடிகளைக் களையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இவ்வாறு கடைப்பிடிக்க வேண்டியதில்லை.
***குர்பானி கொடுக்கப்படும் பிராணிகள்:
குர்பானி கொடுக்கப்படும் பிராணி ஹலாலானதாக கட்டாயம் இருக்க வேண்டும்.
செம்மறி ஆடாக இருப்பின் ஆறு மாதம் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.
சாதாரண ஆடிற்கு ஒரு வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.
மாட்டிற்கு இரண்டு வருடம் ஆகியிருக்க வேண்டும்.
ஒட்டகத்திற்கு ஐந்து வருடம் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.
குர்பானிக்கு ஆடு கொடுத்தால் ஒரு பங்காக (ஒருவர்) மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மாடு அல்லது ஒட்டகத்தை ஏழு பங்காக பிரித்து கொடுக்கலாம். அதாவது கூட்டு குர்பானி.
ஒவ்வொரு பங்கும் மூன்றாக பிரிக்கப்படவேண்டும்.
மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நன்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
நன்றி  .Engr Sulthan

Comments