பெண்கள்   வேலைக்கு   செல்லலாமா?

பெண்கள்   வேலைக்கு   செல்லலாமா     அவர்களுக்கும் கை கால்கள் இருக்கத்தானே செய்கிறது  பதில்  தீர்வை  விரிவாய்  பதில்  தரவும்?
   பெண்கள்  வேலைக்கு செல்லலாமா  என்று  கேட்பதை விட
    அவர்கள் வேலைக்கு செல்லுகின்ற அளவுக்கு சமூகத்தின் நிலையும்  அவர்களின் உடல்  சூழலும்  அமைந்துள்ளதா என்பதை  ஆய்வு செய்வதே  அறிவுக்கு பொறுத்தமாகும்
    கை கால்கள்  இருப்பதால்  வேலைக்கு செல்லலாம்  என்று நினைப்பது அறியாமையாகும்
    பருவம் அடையாத சிறார்களுக்கும்
வயோதிகர்கள்.  ஏன்  குழந்தைகளுக்கும்  கூடத்தான்  கை கால்கள்  இருக்கின்றது
   ஆனாலும்   அதற்காக அவர்களின் மீது பாரத்தை சுமத்துவது நல்லதல்ல
       வேலை என்று வந்து விட்டால் அதற்கு  உடல் வலிமை அவசியம்
பெண்களை பொறுத்தவரை  இயற்கையிலேயே உடல் வலிமை குறைந்தவர்கள்  மென்மையானவர்கள்
      அதனால் தான் வேலையில் உள்ள பெண்களில் பலர்களும்  கூட சிந்தனைக்கு ஏற்ற வேலையில் இருக்கின்றார்களே தவிர வலுவான வேலைகளில்  இருப்பதில்லை  சிலர் நீங்களாக
   ஒரு ஆண்  உடலில்  இருக்கின்ற வலிமை தரும் தசைநாறுகளை விட பெண்களின்  உடலில் 14- சதவிகிதம் வலிமை தசைநாறுகள் குறைவாகவே அமைந்துள்ளது
   அதனால் தான்  20 வயதுள்ள ஒரு  ஆண் உண்ணும் உணவை 30 வயதுள்ள ஒரு பெண் உண்ணுவதில்லை
   ஒரு ஆணிண் உடலில் கொழுப்பு சத்துக்கள் குறைவாக இருக்கும் 
   ஆனால்  ஒரு பெண்ணிண் உடலில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும்
    அதனால் தான்  பெண்கள்  மினுமினுப்பானவர்களாகவும்  மென்மையானவர்களாகவும் உள்ளனர்
   அவர்கள்  வேலை எனும் பெயரில் வெளியில் செல்லும் போது சூரிய ஒளிக்கதிர்களால்  அந்த மென்மையையும்  மினுமினுப்புத் தன்மையையும்  நாள் பட இழக்கின்றனர்
  பல வருடம் வேலைக்கு போகும் பெண்களையும்  வேலைக்கு போகாத பெண்களையும்  நீங்கள் ஒப்பிட்டு பார்க்கலாம்
  2- தனிப்பட்ட வேலைகளை தள்ளி அரசாங்க வேலை என்று எடுத்துக் கொண்டால்  ஒரு ஆண் செய்யும் வேலை நாட்களை விட பெண்கள் வேலை செய்யும் நாட்கள் குறைவாகும்
     இயற்கையிலேயே அவர்களுக்கு ஏற்டுகின்ற உபாதையின் காரணத்தால் எடுக்கப்படும் விடுமுறைகள்
   அதை அவர்கள்  மறைத்து வந்தாலும் அதனால்  ஏற்படும் டென்சன்கள்
   அரசாங்க பணிகளில் உள்ள பெண்களில் பலர் நுகர்வோர்களிடம்  கடுமையாக நடப்பது எதனால்  என்ற ஆய்வின் முடிவுகள் தான் இவை
3-- திருமணமான பெண்களாக இருந்தால் கர்பத்திற்காகவும்    பிரசவத்திற்காகவும்  போடப்படும் விடுமுறைகள்  அந்த நேரத்தில் மாற்று நபர்களை  வேலைக்கு தேடும் சிக்கல்கள் ஏற்படுகிறது
4-- தாயின் அரவணைப்பில் வளர வேண்டிய குழந்தைகள்  அவர்கள் வேலைக்கு செய்வதால்  அந்த அரவணைப்பை இழக்க வேண்டிய சூழ்நிலை அதிகம்  ஏற்படுகின்றது 
    இதனால்  சிறு குழந்தைகள் மனரீதியாகவும்  உடல் ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றது  அவர்கள் வழி கெடுவதற்கு அதிகமான வாய்ப்புக்கள் ஏற்படுகிறது
  5-- பெண்களின் உயர் அதிகாரிகளாக ஆண்கள் இருக்கும் பட்சத்திலும்
   அவர்களோடு  வேலையில் ஆண்கள் இருக்கும் பட்சத்திலும் பாலியல்  ரீதியாக அதிகமதிகம் பாதிக்கப்படுவது  அன்றாடம் கண்டுவரும்  செய்திகளாகும்
    பொதுவாக இதை சிந்திப்போர்  வேலைக்கு செல்லும் பெண்களிடம் விசாரித்து அறிந்து கொள்ளலாம்
     துவக்க காலத்தில் பெண்களின் வேலைக்கு அனுமதியளித்த கணவண்மார்கள் 
   அவர்களின் மனைவியர்கள் வேலைக்கு செல்லும் போது செய்யும் அழங்காரங்களை பார்த்தும்
  அல்லது வேலை நிமித்தமாக அவர்களின் முதலாளிகள் சக தொழிலாளர்கள்  இவர்களுக்கு செய்யும் கால்களின் மூலமாக சந்தேகிக்கின்றனர்
   இதனால்  இல்லறத்தின் இனிமையை  இழந்து வாடுவோர்  சமூகத்தில் அதிகம்
     மேலும் பெண்களின் வேலை பளுவின் காரணமாக இரவு வீடு திரும்பியவுடன் 
தனது கணவனை அனைத்து விதங்களிலும்  திருப்தி படுத்த முடியவில்லை என்பது வேலைக்கு செல்லும் பெண்கள்  அறிந்ததே
  6--  பெண்கள் வேலைக்கு சென்று உழைப்பதால் அவர்கள் தனது வீட்டில் பார்க்க வேண்டிய வேலைகளிலிருந்து  விடுதலை பெறவில்லை
     ஆபிஸ் வேலை வீட்டு வேலை என்ற இரு சிரமங்களை அனுபவித்துக் கொண்டு தான் உள்ளனர்
   it போன்ற கம்பனிகளில் வேலை செய்யும் பெண்கள் சோஷலிசம் எனும் பெயரால் 
   விடுமுறை நாட்களில்  பாய் பிரெண்டுகளுடன் உலா வருவது மதுபானம் அருந்துவது போன்ற ஒழுக்கமற்ற காரியங்களில் அறிந்தும் அறியாமலும் சிக்கி தவிக்கின்றனர்
  7-- வீட்டில் தனது மனைவியும் பணம் சம்பாரிக்கின்றாள் என்ற உணர்வில்  அவர்களின் கணவண்மார்கள்  தனது சம்பாத்தியத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வதற்கும்  அவர்களின் கடமைகளை மறந்து நடப்பதற்கும் வேலைக்கு செல்லும் பெண்களே மூல காரணமாய் விளங்குகின்றனர்
    தானும் பணம் ஈட்டும் நிலையில் தான் உள்ளோம் என்ற ஆணவத்தில்   கணவண்மார்களை உதாசிதனம் படுத்தும்  ஷைத்தான்களின்  உந்துதலுக்கு தள்ளப்பட்டு 
  
  அமைதியான தனது இல்லற வாழ்வை தொலைத்து விவாகரத்துக்கு வழிவகை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் 
8-- ஒரே குடும்பத்தில்  அரசாங்க வேலை செய்யும்  கணவண் மனைவி  தனது சம்பாத்தியத்தை வைத்து தனது குடும்பத்தை மட்டுமே உயர்த்தும் நிலை உள்ளது
    அதே நேரம் அவனது மனைவியின்  வேலையை அரசாங்கம்  வேறு ஒரு ஆணுக்கு தந்தால்  இன்னொரு குடும்பமும் முன்னேறும் என்ற நியாய உணர்வை  சிந்திக்க தவறுகின்றனர்
    சுருக்கமான விளைவுகள்
          -------------------
   பெண்கள்  வேலைக்குச் செல்வதால்   பொருளாதார ரீதியில் மட்டும்  சில முன்னேற்றம்   அடைவார்களே தவிர
     அதன்   காரணத்தால்
      உடலுக்கு பாதிப்பு
     மணவாழ்க்கைகு  பாதிப்பு 
     அவர்களின் குழந்தைகளுக்கு   
                  பாதிப்பு
    தேவையற்ற சுமைகள் சங்கடங்கள்
      இவைகளுக்கெல்லாம்  மேலாக பெண்கள்  தங்களின் இளமையையும்   அழகையும் இழந்த நிலைக்கு தள்ளப்பட்டால் வெளிநாட்டு கம்பனிகளும்  அது போன்ற நிறுவனங்களும்  அவர்களை வேலையிலிருந்து நீக்கும்  நிலைக்கு  தள்ளப்பட்டு
  அவர்கள்  கருவேப்பிலை எனும் நிலையில் தான் பயன் படுத்தப் படுகின்றார்கள்
  இது போன்ற சிந்தனை கருத்துக்களை உணராதவர்களே  இதற்கு உரிமை என்றும்  பெண் சுதந்திரம்  என்றும்  அறியாமையில்  கொடிபிடிப்பதைப்  பார்க்கிறோம்
    ஆண்மையற்ற சில ஆண் வர்க்கம் அதை தூண்டுகின்ற காட்சியையும் பார்க்கின்றோம்
       இஸ்லாமிய தீர்வுகள்
----------------------------------
    இஸ்லாத்தை பொறுத்தவரை பொருளாதாரத்தை திரட்டுவது மனைவி மக்களை கவனிப்பது இவையனைத்தும்
    வலுவாக படைக்கப்பட்டுள்ள ஆண்களின் மீது தான் சுமத்தப் பட்டுள்ளது 
       கணவனின்  தேவைகளை  நிறைவேற்றுவது  அவனது பிள்ளைகளை பேணி பாதுகாப்பது அவனது உடமைகளுக்கு உறுதுணையாக இருப்பது அனைத்தும் 
  உடல்  மென்மையாக படைக்கப்பட்டுள்ள அவனது மனைவியின் மீது சுமத்தப்பட்டுள்ளது
   
   எனவே இஸ்லாமிய பெண்கள் வேலைக்கு செல்வதை  மார்க்கம் அனுமதிக்கவில்லை
     الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ ۚ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ ۚ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا  ﴿4:34﴾
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்
                       நிர்பந்தம்
                       (++++++)
     நிர்பந்தம்  என்ற நிலையில்  தனது  குழந்தைகளையும் தன்னையும்  தான்  தான்  பார்க்க வேண்டும்  என்ற நிலையில்  உள்ளவர்கள்
    அவர்களுக்கு முடிந்த தொழிலை   மார்க்க கட்டுப்பாடுகளை    பின்பற்றிய நிலையில்  தொழிலில் ஈடுபடுவதற்கு  இஸ்லாத்தில் தடை இல்லை
     நபியவர்களின்  காலத்தில் கணவணை  இழந்து  தனிமையில் நின்ற ஒரு பெண்
     தொழில் செய்வதற்கு வெளியில் போகலாமா  என்று வினவியதற்கு  
  விறகு வெட்டி சம்பாரித்துக் கொள் என்று  அனுமதி கொடுத்த வரலாற்றை  பார்க்க முடிகின்றது
          முஸ்லிம்  சமூகம்
          --------------------
  இறையருளால் முஸ்லிம் சமுதாயம்  தங்களது வீட்டுப் பெண்களை  தொண்ணூரு சதவிகிதம்  வேலைகளுக்கு அனுப்புவதில்லை
    ஆனாலும்  ஐந்து  உறுப்பினர்கள் உள்ள குடும்பத்தில்  ஒரு ஆண் அல்லது தந்தை மட்டுமே உழைக்கிறார்
  
     இறைவனின்  அருள் அந்த இல்லத்திலும்  இருக்கின்றது 
   வறுமையை  காரணம் காட்டி பிச்சை எடுப்பவர்கள்  அரிதிலும் அரிது
   நட்புடன்  J .இம்தாதி

Comments