தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா?

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா?
தொழுகையில் நம்மால் இயன்ற அளவு குர்ஆன்
ஓத வேண்டும். குர்ஆனை மனனம்
செய்து ஓதுவதைப் போன்று அதைப் பார்த்தும்
ஓதலாம். இதற்கு மார்க்கத்தில் எந்தத்
தடையுமில்லை.
இவ்வாறு ஓதும் போது நமது பார்வை குர்ஆன்
பிரதிகள் மீது
இருக்கும். தொழுகையில்
இது தவறல்ல. தொழுகையில் நமக்கு முன்னால்
உள்ள பொருளைப் பார்ப்பது குற்றமல்ல.
தொழுகையில் நெற்றி படும் இடத்தில் தான்
பார்வை இருக்க வேண்டும் என்று சிலர்
கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
தொழுகையில் நெற்றி படும் இடம் அல்லாத
வேறு இடங்களில்
பார்வை செலுத்துவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம்
உள்ளது.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹரிலும்
அஸரிலும் (எதையேனும்)
ஓதுவார்களா?” என்று கப்பாப் (ரலி) அவர்களிடம்
கேட்டோம். அதற்கவர், ஆம் என்றார். “நீங்கள்
எப்படி அதை அறிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டோம்.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்”என்று கப்பாப்
(ரலி) பதிலளித்தார்.
அறிவிப்பவர்: அபூமஃமர்,
நூல்: புகாரி 746, 760, 761
தொழுகையில் நெற்றி படும் இடத்தைத் தான்
பார்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்)
கட்டளையிட்டிருந்தால் நபிகள் நாயகத்தின்
தாடை அசைவதை நபித்தோழர்கள் பார்த்திருக்க
முடியாது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய
கிரகணம் ஏற்பட்ட போது, (அதற்காக)
தொழுதார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள்
நின்ற இடத்தில் எதையோ பிடிக்க
முயன்று விட்டுப் பின்
வாங்கினீர்களே?” என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
“எனக்குச் சொர்க்கம் எடுத்துக் காட்டப்பட்டது.
அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன்.
அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும்
அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்” என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 748
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தமக்கு முன்பகுதியில் தென்பட்ட குலையைப்
பிடிக்க முயன்றுள்ளார்கள். இந்த சமயத்தில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
பார்வை நெற்றி படும் இடத்தில் நிச்சயம்
இருந்திருக்காது. நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் இந்தச் செயலை நபித்தோழர்கள்
பார்த்துள்ளனர். எனவே அவர்களும் நெற்றி படும்
இடத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
ஆனால்
பார்வையை வானத்தை நோக்கி உயர்த்துவதற்குத்
தடை உள்ளது.
தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதும்
போது ஒரு பக்கம் நிறைவுற்றுவிட்டால் அடுத்த
பக்கத்தை திருப்ப வேண்டிய அவசியம் வரும்.
தொழுது கொண்டிருக்கும்
போது இது போன்று செய்யலாமா? என்ற
சந்தேகம் எழலாம்.
தொழுது கொண்டிருக்கும் போது அவசியம்
ஏற்பட்டால் தொழுகைக்குச் சம்பந்தம் இல்லாத
சிறு சிறு வெளிக் காரிங்களை செய்து கொள்ள
மார்க்கம் அனுமதிக்கின்றது. இதனால்
தொழுகைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
பின்வரும் செய்திகள் இதைத்
தெளிவுபடுத்துகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்
புதல்வி ஸைனபுக்கும் – அபுல் ஆஸ் பின் ரபீஆ
பின் அப்தி ஷம்ஸ் அவர்களுக்கும் பிறந்த (தம்
பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத்
(தமது தோளில்)
சுமந்துகொண்டு தொழுதிருக்கிறார்கள்.
சிரவணக்கம் (சஜ்தா மற்றும் ருகூஉ) செய்யச்
செல்லும்
போது உமாமாவை இறக்கி விடுவார்கள்;நிலைக்குச்
செல்லும் போது (மீண்டும்)
உமாமாவை (தமது தோüல்) தூக்கிக்
கொள்வார்கள்.
அறிவிப்பவர் : அபூ கத்தாதா (ரலி)
நூல் : புகாரி (516)
நான் எழுந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
செய்தது போன்று (உளூ)
செய்து விட்டு (தொழுது கொண்டிருந்த) நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் போய்
நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என்
தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப்
பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (183), முஸ்லிம் (1275)
ஆனால் பார்த்து ஓதும் போது தொழுகையின்
ஒரு சுன்னத்தை விட்டு விடும் நிலை ஏற்பட்டால்
அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அதாவது குர்ஆனை ஒரு சட்டத்தில் வைத்துக்
கொண்டு அல்லது கரும்பலகையில்
எழுதி வைத்து அதைப் பார்த்துக் கொண்டு,
அல்லது கம்ப்யூட்டர் அல்லது டிவி திரையில்
குர்ஆனை ஓட விட்டு அதைப் பார்த்துக்
கொண்டோ ஓதினால் அதில் தவறு இல்லை.
ஆனால்
குர்ஆனை இரு கைகளாலோ அல்லது ஒரு கையாலோ பிடித்துக்
கொண்டு ஓதினால் தொழுகை முழுவதும்
நெஞ்சில் கை கட்டும் சுன்னத் முழுமையாக
விடுபட்டு போகிறது. நெஞ்சில்
கை கட்டுவதற்கு பதிலாக குர்ஆனைப் பிடித்துக்
கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டால்
அது தவறாகும்.
அதாம் ஃபலாஹி....

Comments