இஸ்லாமிய திருமணம்-1

மண வாழ்வின் அவசியம்:
மனித வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில்
திருமணம் முக்கியமான இடத்தை வகுக்கின்றது.
திருமணத்தை மறுப்பவர்கள் மிகவும்
அரிதாகவே காணபடுவதிலிருந்து
மணவாழ்க்கையின் அவசியத்தை உணரலாம்.
மணவாழ்வு, ஆன்மீகப்
பாட்டைக்கு எதிரானது என்று சில மதங்கள்
கூறுவதை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
மாறாக, திருமணத்தை அதிகமதிகம்
வலியுறுத்துகிறது.

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் நபிகள்
நாயகம்(ஸல்) அவர்களிடம் துறவறம்
மேற்கொள்ள அனுமதி கேட்டபோது நபிகள்
நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கோரிக்கையை
நிராகரித்து விட்டனர். அவருக்கு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் அனுமதி தந்திருந்தால் நாங்கள்
ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று சஹ்த்
பின் அபீவக்காஸ்(ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். ( நூல்கள்: புகாரி 5074,
முஸ்லிம் 2488 ).
நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க
மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல்
தொழுது கொண்டிருப்பேன் என்றும், மற்றும்
சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும்
பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது,
இப்படியெல்லாம் கூறியவர்களின் நிலை
என்னவாகும்? என்று கூறிவிட்டு, நான்
நோன்பும் வைக்கிறேன்; அதை விட்டு விடவும்
செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன்;
உறங்கவும் செய்கிறேன்; பெண்களை
மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது
வழிமுறையைப் புறக்கணிக்கின்றாரோ அவர்
என்னைச் சேர்ந்தவரல்லர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி 5063 ).
மேற்கண்ட
நபிமொழிகளிலிருந்து முஸ்லிம்களுக்கு திருமணம்
எவ்வளவு அவசியமானது என்பதை புரிந்து
கொள்ள வேண்டும்.
திருமணத்தின் நோக்கம்:
திருமணத்தின் அவசியம் குறித்து இஸ்லாம்
இரண்டு காரணங்களைக் குறிப்பிடுகின்றது.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப்
பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள்
யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்,
அவரிலிருந்தே அவர் மனைவியையும்
படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக
ஆண்களையும் பெண்களையும்
(வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;.
ஆகவே,
அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;.
அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர்
(தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக்
கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக்
கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்).
- நிச்சயமாக அல்லாஹ் உங்கள்
மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
(அல்-குரான் 4:1).
சந்ததிகள் பெற்றெடுப்பது திருமணத்தின்
நோக்கங்களில் ஒன்று என இதன் மூலம்
அறியலாம்.
உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்கு சக்தி
பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ள
வேண்டும். ஏனெனில் திருமணம் என்பது
(பிறன்மனை நோக்குவதை விட்டும்)
பார்வையைத் தடுக்க கூடியதாகவும் கற்பை
காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( அறிவிப்பவர்: இப்னு மசூத்(ரலி) நூல்: புகாரி
1905, 5065, 5066).
தகாத நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும்
தன்னைக் காத்துக் கொள்வது திருமணத்தின்
மற்றொரு நோக்கமாகும் என்பதை இந்த
ஹதீஸிலிருந்து அறியலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Comments