நோன்பு வைத்து விட்டு காரல் எச்சிலை முழுங்கினால் நோன்பு முறியுமா?

     நோன்பு வைத்து விட்டு காரல் எச்சிலை   முழுங்கினால்  நோன்பு முறியுமா?
   
மார்க்கத்தில் ஒரு சட்டத்தை நிறுவுவதற்கு அல்லாஹ் ரசூலின்  வழிகாட்டல்  தேவை
   குர்ஆன் ஹதீசில் காரல் எச்சிலை முழுங்குவதால்  நோன்பு முறியும் என்று நாமறிந்தவரை ஆதாரங்கள் காணமுடியவில்லை
     யார் இதை மக்களுக்கு சட்டமாக சொல்கின்றார்களோ  அவர்கள் தான் தெளிவான ஆதாரங்களை நிறுவ கடமைப்பட்டிருக்கின்றனர்
   ஆனால் இதை சொல்வோர் அதற்கான சான்றுகளை நிறுவி வாதிக்கவில்லை
                       --------
           நோன்பு  என்றால்
என்ன ?
                       *********
   ஒரு மனிதன் பஜ்ரு முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும்   இல்லறத்தில் ஈடுபடாமலும்  இருப்பதற்கு பெயர் தான் நோன்பு என்று சொல்லப்படுகின்றது

     அதாவது நமது உடலுக்குள் வெளியிலிருந்து எந்த ஒரு உணவையும்  அனுப்பாமலும்  உடலிலிருந்து  எந்த ஒன்றயும் இச்சை உணர்வோடு  வெளியாக்காமல் இருப்பதும் தான்  நோன்பாகும்
                       --------
       காரல் எச்சில் என்பது இச்சை உணர்வோடு உடலிலிருந்து எவருக்கும் வெளியாவதில்லை
      சிறுநீர் மலம் என்பது எப்படி மனிதக் கழிவுகளோ  அது போலத்தான் காரல் எச்சில் என்பது  குடல் கழிவுகளாகும் 
  அது வெளியாகி வரும் போது அதை தடுப்பது உடல்  ஆரோக்யமான செயல் இல்லை
      அதே நேரம் அந்த காரல் எச்சிலை முழுங்குவதால்  நோன்பு முறியும் என்பதற்கு ஆதாரம் இல்லை
   இதை விளங்காதவர்கள் நோன்பு நேரத்தில்  அடிக்கடி காரி உமிழ்ந்து நாவை வரண்டு போகச் செய்கின்றனர் பிறர்களை முகம் சுழிக்க செய்கின்றனர்  இதனால் அவர்களுக்கு தண்ணீர் தாகம் தான்  மேலோங்குகின்றது
            இது போக நவீன காலத்தில் பசியுணர்வை அடக்குவதற்கு  சில மெடிசன்கள் உள்ளது அதை ஊசி வழியாக உடலில் செலுத்துவதை  தவிர்க்க வேண்டும்
    மார்க்கம்  எளிதானது அதை நாமே சிரமத்திற்க்குறியதாக கருதுவது பாவமான காரியமாகும்
                      *********
      காரல் எச்சிலை முழுங்கினால் நோன்பு முறியும் என்று தான் இஸ்லாம் பேசவில்லையே தவிர
    காரல் எச்சிலைப் பற்றி வேறு விதமாக சட்டங்கள் உள்ளது
                         -------
410. அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் பள்ளி வாசலின் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள்
பின்னர் “உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப் புறமாகவோ உமிழலாகாது
தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!“ என்று கூறினார்கள்
                        -------
407. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டுவிட்டு அதைச் சுரண்டி (அப்புறப்படுத்தி)னார்கள்
                       --------
            நட்புடன்  J .இம்தாதி

Comments