ஃபஜ்ர் தொழுகை

ஃபஜ்ர் தொழுகை - சில நினைவுறுத்தல்கள்
ஆண்கள் அதிகாலையில் எழும்புவது கடினமாக
உள்ளதா?
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில்
பல மாற்றங்களை அல்லாஹ்
அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான்.
எனவேதான் அதிகாலைத்
தொழுகையை நிறைவேற்றுபவர்க
ளை இஸ்லாம் வாழ்த்துகின்றது.
வெறுமனே மீசையும்
தாடியும்
வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக
அதிகாலைத்
தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில்
நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள்
என்று இஸ்லாம் பெயர் சூட்டுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம்
இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்!
எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில்
அருள்வளத்தை நல்குவாயாக!” (அபூதாவூத்)
அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப்
பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும்
இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக்
கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம்
இருக்கின்றது.
ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்:
அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில்
புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம்
அண்ணலார் (ஸல்)
என்னருகே வந்து தங்களது பாதங்களால்
என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்:
“அருமை மகளே! எழு! அல்லாஹ்வின்
வாழ்வாதாரங்கள் வழங்கப்படும்
நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்
படுத்துபவராக மாறிவிடாதே.
அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும்
இடையே இறைவன் (ரிஸ்க் எனும்)
வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)
ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும்
இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றா
ர்கள்.
அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும்
ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சி
யை நபி (ஸல்) அவர்கள்
இவ்வாறு விவரிக்கின்றார்கள்:
“படுக்கை, போர்வை,மனைவி, மக்களின்
அரவணைப்பு அத்தனையையும்
உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப்
பார்த்து இறைவன் வியப்படைகின்றனான்.
வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே!
எனது இந்த அடியானைப் பாருங்கள்..! படுக்கை,
போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும்
உதறி விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான்.
எதற்காக..? என்ன வேண்டும் இந்த
அடியானுக்கு..?
எனது அருள்மீது ஆசை வைத்தா…?
எனதுதண்டனையைப் பயந்தா…?” பின்னர்
வானவர்களிடம்
அல்லாஹ்வே கூறுகின்றான்:“உ
ங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன்
ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம்
கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ
அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான்
பாதுகாப்புக் கொடுப்பேன்.” (அஹ்மத்)
நபிகளாரின் வேதனை:
உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்:
ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஸுபுஹ்
தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித்
திரும்பியவாறு கேட்டார்கள்: “இன்ன மனிதர்
தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை..”
என்று கூறினர். மீண்டும், “இன்னவர்
வந்தாரா..?” என்று கேட்க, மக்களும் “இல்லை”
என்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள்
வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:
“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும்
(ஸுபுஹ், இஷா) கடினமானவையாக
இருக்கும். இந்த இரு தொழுகைகளில்
கிடைக்கும் நன்மைகளை இவர்கள்
அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக
வருவார்கள்.” (புகாரி,முஸ்லிம்)
ஆம். நபித்தோழர்களின் காலத்தில்
இறைநம்பிக்கையாளர்களை அளக்கும்
அளவுகோலாக இந்த இருவேளைத்
தொழுகைகள்தாம் இருந்தன. இப்னு உமர் (ரலி)
கூறுகின்றார்: “ஸுபுஹ் தொழுகைக்கும்
இஷா தொழுகைக்கும்
யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக்
குறித்து நாங்கள்
மோசமாகவே எண்ணியிருந்தோம்
” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).
அண்ணலாரின் அமுத மொழிகள்:
மறுமையில் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில்
இருளில் ஒளியின்றி நடப்பவர்களுக்கு
நற்செய்தியாக நபி (ஸல்) அவர்கள்
இவ்வாறு கூறினார்கள்:
“(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில்
நடந்து செல்பவர்களுக்கு மறுமையில்
முழுமையான ஒளி கிடைக்கும் எனும்
நற்செய்தியைக் கூறுங்கள்” (பைஹகீ)
“சூரிய உதயத்திற்கு முன்புள்ள
தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப்
பின் உள்ள தொழுகையையும் (ஸுபுஹ்,
இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில்
ஒரு நாளும் நுழைய மாட்டார்” (முஸ்லிம்)
யார் ஸுபுஹ் தொழுகையைத்
தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின்
பாதுகாப்பில் இருக்கின்றார்.” (தபரானி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக
அபூ உமாமா (ரலி) அறிவிக்கின்றார்: யார்
ஒளு செய்தபின்
பள்ளிவாசலுக்கு வந்து ஃபஜ்ருக்கு முன்
இரண்டு ரக்அத் தொழுது பின்னர் ஃபஜ்ர்
தொழுகையையும் தொழுகின்றாரோ அவர்
நன்மக்களின் பட்டியலிலும், அல்லாஹ்வின்
தூதுக்குழுவினரின் பட்டியலிலும்
எழுதப்படுகின்றார்.” ஒவ்வொரு நாளும்
வானவர்கள் இரு தடவை இந்தப்
பூமிக்கு வருகை தருகின்றார்கள். அவர்கள்
அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ்
தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள்.
பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம்
அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும்
அல்லாஹ் கேட்கின்றான்:
“எனது அடியார்களை எந்நிலையில்
சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?”
அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:“அவர்கள்
தொழுகையில் இருக்கும் நிலையில்
சந்தித்தோம். தொழுகையில் இருக்கும்
நிலையிலேயே விட்டு வந்தோம்.” (திர்மிதி)
அதிகாலை சூரியன் உதயமாகும்
வரை தூங்குபவர்களைக் குறித்து அண்ணல்
நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு நபிகளாரின் பதில் இது: “அந்த மனிதரின்
காதுகளில் ஷைத்தான் சிறுநீர்க்
கழித்து விட்டான்”
நாம் ஒவ்வொருவரும் நம் பஜர் தொழுகையின்
நிலை குறித்து சுயவிசாரணை செய்து கொள்ளக்
கடமைப்பட்டுள்ளோம்.
அது முறைப்படி பேணப்படாதிருந்தால் அதனைச்
சரிசெய்துகொள்ள நாம் செய்ய
வேண்டியது என்ன?
1) தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ்
தொழுவேன் (இன்ஷா அல்லாஹ்)
என்றஉறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்
(எழுந்தால் பார்த்துக்
கொள்ளலாம் என்றல்ல!)
2) படுக்கும் முன் அல்லாஹ்விடம் துஆ
கேளுங்கள்.
3) தவறிய தொழுகைகளுக்காக பாவமன்னிப்புக்
கேளுங்கள்.
4) நாம் தொழுதால்தான் நமது பிள்ளைகள்
தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்
5) அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.
6) சீக்கிரம் தூங்கி அதிகாலையில்
எழுவதே நபிவழி என்பதை நினைவில்
வையுங்கள்
7) கெட்ட முஸ்லிம்களுக்கு
நாமே முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூட
ாது என்பதாக உறுதி எடுங்கள்.
வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன்
தொடர்பை ஏற்படுத்துங்கள்.
9) ஒளுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.
10) தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும்
ஒருவர் மற்றவரைத்
தண்ணீர்தெளித்தாவது எழுப்ப முயலுங்கள்.
அல்லாஹ்வின் அருள்
அதில்தான்அடங்கியுள்ளது.

Comments