ரமலான் மாதமா நடிகர்களின் மாதமா ?

ரமலான் மாதமா
              நடிகர்களின்   மாதமா  ?

      ரமலான்     இது  சங்கையான
              மாதம் மட்டுமல்ல
  மனிதர்களை சங்கைக்குரியவர்களாக
   மாற்றிய மாதம்  மாற்றும் மாதம
      ஒரு மனிதன்  பாடுபட்டு  விடுமுறை எடுத்து சுற்றுலாதளம் சென்றால் அந்த தளத்தை சுற்றிப் பார்த்தால் தான் அவனது சுற்றுலாவின்  பலன்
    ஊட்டிக்கு சுற்றுலா செல்பவன் அந்த ஊட்டியில் விடுமுறை எடுத்த மூன்று நாளும பாய் போட்டு  உறங்கி வந்தால் அவன் சுற்றுலா சென்றதில் என்ன பலன் ?
   இது போலத்தான் ரமலான் எனும் புனித மாதத்தை அடைந்தவன்
அந்த மாதத்தை சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லையானால்   அந்த மாதத்தை அவன் எதிர் கொள்வதிலும் பலனில்லை  முயற்ச்சிப்பதிலும் பலனில்லை

        அம்மாதத்திலே அவன் தொழுத தொழுகையும் வீணாணதே
        அம்மாதத்தில் அவன் பிடித்த நோன்புகளும்  வீணாணதே
        அம்மாதத்திலே  அவன் செய்யும் இதர நன்மைகளும் வீணாணதே
     ஏழைகளின் பசியுணர்வை அறிவதற்காக  இந்த ரமலானில்லை
    அல்லது ஏக இறைவனை புகழ் பாடுவதற்கும் இந்த ரமலானில்லை
  யாருமே பார்க்காத நேரத்திலும் யாருடைய அச்சங்களாலும் துவலாத நேரத்திலும்  ஒரு மனிதன் தான் சம்பாரித்த பணத்தில் செய்யப்பட்ட உணவை இந்த ரமலானில் உண்ண மறுக்கின்றான் என்றால்  இது எதற்காக?
 
    படைத்தவன் கட்டளை போட்டால் ஹலாலான உணவைக் கூட நான் உண்ண மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டு
ரமலான் அல்லாத மாதத்தில்  பிறர் பொருளுக்கும் உடமைகளுக்கும் ஆசைப்படுகின்றான் என்றால்
   இவன் ரமலானில் உண்ணாமல் பருகாமல் அல்லாஹ்வை ஏமாற்றும் நடிகனாக வாழ்ந்துள்ளான் என்பது தான் பொருள்
கடமையாக்கப்படாத இரவுத் தொழுகைகளில் தராவீஹ் தொழுகைகளை பேணுபவன்  ரமலான் அல்லாத மாதங்களில் கடமையாக்கப் பட்ட தொழுகைகளை புறக்கணித்தால் இவன் ரமலானில் அல்லாஹ்வை ஏமாற்றும்  நடிகனாக வலம் வாழ்ந்துள்ளான் என்பதே பொருளாகும்
     ரமலானில் தஸ்பீஹ் மணிகளை உருட்டிக் கொண்டும்  குர்ஆன் வசனங்களை பேசிக் கொண்டும் இருந்தவன் ரமலான் முடிந்து அதை மூட்டைக் கட்டினால்  இவன் ரமலானில் நடிகனாக வலம் வந்துள்ளான் என்பதே பொருளாகும்
   
     ரமலானில் மதுபானத்தை தொடாமல் இருந்தீர்களே எதற்காக ?
  அல்லாஹ் பார்க்கின்றான் என்பதற்காகவா  ?
  ரமலானில் மனைவியை அடிக்காது இருந்தீர்களே எதற்காக?
  அல்லாஹ் பார்க்கின்றான் என்பதற்காகவா?
    அப்படியானால் ரமலானில் உங்களை கண்காணித்த அல்லாஹ் ஏன் துல்கஃதாவிலே கண்காணிக்க மாட்டானா  ?
   துல்ஹஜ்ஜிலே கண்காணிக்க மாட்டானா?
நீங்கள் ஏற்றுக் கொண்ட இறைவன் ரமலானுக்கு  மட்டும் அல்லாஹ்வா?
  அல்லது 12-மாதத்திற்கும் அல்லாஹ்வா?
   
    இது தான் இறைவனை புரிந்து வைத்துள்ள இலட்சணமா?
      திருமணம் செய்துவிட்டு ஒரு நாளைக்கு மட்டும் அவன் அவளை மனைவியாக பார்த்தால்  இதற்க்கு பெயர் திருமணமா?
   இது  போலத்தான் இறைவனை ஏற்றுக் கொண்டு அந்த இறைவனை ஒரு மாதத்திற்கு மட்டும் அஞ்சுபவனும் இறைவனிடத்தில் துரோகியே நிச்சயம் அவன் பாவியே
                  --------------
             நோன்பின்  காரணம்
                    ★----------★
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ  ﴿2:183﴾
2:183. ஈமான் கொண்டோர்களே!
   உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது
          (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்
                        ---------  
1903. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
“பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஷஹீஹ் புகாரி
                    ----------
     குடியிருக்கும் வீட்டை ஒரு மாதம் முழுவதும் சுத்தம் செய்து விட்டு  பெயிண்ட் அடித்து  விட்டு மீண்டும் அந்த வீட்டில் குப்பைகளை கொட்டுவது எந்தளவிற்கு  முட்டாள்தனமோ
   அதை விட அதிக முட்டாள் தனம் தான்
  ரமலானில் தூய்மையானவர்களாக தக்வாதாரிகளாக இருந்து விட்டு ரமலான் முடிந்த பின் மீண்டும் பழைய வாழ்க்கையை தேர்வு செய்தல் என்பதுமாகும்
   
   எனவே ரமலான் மாதம் நடிகர்களின் மாதம் இல்லை என்பதை உணருங்கள் உங்கள் வாழ்வில் இறையருள் பெறுகட்டும்
நட்புடன்   J .இம்தாதி

Comments