அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு


அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

        நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வசனங்கள்  அருளப்பட்டால் அந்த வசனங்களையும் உடனே எழுதச் சொல்வார்கள். அதுதோளிலோ, எலும்பிலோ எழுதப்படும். இவ்வாறு ஒவ்வொரு  முறை வஹி அருளப்படும்பொழுதும் செய்து வந்தார்கள். இந்த ஆயத்தில் இந்த ஸூராவில் சேர்க்கப்படவேண்டும் என்றும்,இந்த வசனத்திற்குப் பிறகு இந்த வசனம் சேர்க்கப்பட வேண்டும்என்றும் வரிசைப்படுத்தி சொல்வார்கள். அதுபடி எழுதப்படும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் - ஜிப்ரில் (அலைஹிஸலம்) அவர்களிடம் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசி ஆண்டில் ரமலான் மாதம் அருள்மறை குர்ஆன் முழுவதும் இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.
          நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)மரணித்த பிறகு அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்  ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத் தூதன் என்று பிரகடனம் செய்தான்.  அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள் கொல்லப்பட்டார்கள். இப்போருக்கு 'யமாமா' என்று பெயர்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.''நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணமாக இருந்தது. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை எடுத்துரைத்து விளக்கிய பிறகு அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள ஒப்புக் கொண்டார்கள்.
குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலை சிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து வரச் செய்து பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு ஒப்படைத்தார்கள்.ஆரம்பத்தில், அவர்கள்.ஒரு மலையை நகர்த்தி வைக்கச் சொன்னாலும் வைத்திருப்பேன். ஆனால் இப்பணி மிகவும் கடினமானது என்று மறுத்தார்கள். கலீபா அவர்களும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் எடுத்துரைத்தபோது அதற்காக குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக ஸைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்து  குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார்கள்.
அலீ(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்கள்.மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில்அருளப்பட்ட அத்தியாயங்களை அவர்கள் எழுதி.வைத்திருந்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிலிருந்த எழுதப்பட்ட, ஏடுகளையும், தனிப்பட்ட முறையில் எழுதி வைத்திருந்தவர்களிடம் உள்ள ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள். .தாம், மனனம் செய்ததன் அடிப்படையிலும் மற்றவர்களின் மனனத்தை அடிப்படையாகக் கொண்டும் குர்ஆனை வரிசைப்படுத்தினார்கள்.இவ்வாறு தொகுக்கப்பட்ட மூலப் பிரதி அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய பாதுகாப்பில் இருந்து வந்தது.அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அந்த குர்ஆன் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமும் அவர்களுடைய மறைவிற்குப் பிறகு அந்த குர்ஆன் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகளும், நபிகள் நாயகத்தின் மனைவியுமான ஹப்ஸா (ரலியல்லாஹு அன்ஹு) நாயகி அவர்களிடம் வந்து சேர்ந்தது.
உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆட்சியில். மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து,இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில், அரை குறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.இதை அறிந்த உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் 'இந்த குர்ஆனை மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத் தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்' என்று கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
ஸைத் பின் ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபூபக்ர் (ரலியல்லாஹுஅன்ஹு) அவர்களின் ஆட்சியின் போது குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும்குழுவுக்கு தலைமை வகித்தவர்கள்.. எனவே குர்ஆன்  பிரதிகள் தயாரிக்கவும் உஸ்மான் (ரலியல்லாஹுஅன்ஹு) நியமித்த குழுவுக்கும் அவரையே தலைவராக நியமித்தார்கள்.இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹு)ஸயீத் பின்அல்ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹு) , அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
பிரதி எடுத்தல்
        மேலும் ஏராளமான பிரதிகளை எடுக்கச் சொல்லி அந்தப் பிரதிகளை தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படைலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்துள்ள முழுமைப் படுத்தப்படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள்.உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றது

.உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் 'இஸ்தன்புல்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் 'தாஷ்கண்ட்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏக மனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.இந்தப் பணிகளை உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹிஜ்ரி 25ம் ஆண்டு செய்தார்கள். .அண்ணல்

குறியீடுகள் சேர்க்கப்பட்டது

குர்ஆனை அதன் வசனங்களின் உச்சரிப்பு மாறாமல் ஓதுவது முக்கியம். அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக  - ஃபத்ஆ - தம்மா - கஸ்ரா  ( ஸபர் - ஸேர் - பேஷ்) குறியீடுகள் இணைக்கப்பட்டது. அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு - குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத வேண்டுமெனில் குறியீடுகள் அவசியம். ஹிஜ்ரி 66-86 வரை (கி. பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த - உமையாத் - காலத்தின் ஐந்தாவது கலீஃபா - மாலிக் அர்-ரஹ்மான் என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில் இணைக்கப்பட்டது.அரபி வார்த்தைகளின் உச்சரிப்பு சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதன் அர்த்தங்களும் சரியானதாக இருக்கும்.

Comments