கோபம் தவிர்ப்போம்

கோபம் தவிர்ப்போம் :
=================
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்,
"எனக்கு அறிவுரை கூறுங்கள் "
என்றார்
நபி (ஸல்) அவர்கள்,
"கோபத்தை கைவிடு "என்று
(அறிவுரை) கூறினார்கள்
அவர் ("அறிவுரை கூறுங்கள் "எனப்)
பல முறை கேட்டபோதும்
நபி (ஸல்) அவர்கள்
"கோபத்தைக் கைவிடு " என்றே
சொன்னார்கள்
புகாரீ 6116
------------------------------
இன்று எல்லா மனிதர்களிடம்
பரவலாக காணப் படும் குணாதிசயங்களில்
ஒன்று கோபப்படுவது
நான் என் வாழ்க்கையில்
கோபப்பட்டதே இல்லை என
யார் சொன்னாலும் அவர் சொல்வது பொய்யே
சாதரனமாக ஒரு நபரை பார்த்து
அந்த நபர் ஒவ்வொரு நேரமும்
ஒவ்வொரு குணத்தில் இருப்பார்
அப்போது நாம் அவரை சந்தித்தால் சரிவராது
என சிலர் சிலரைப் பற்றி கூறவதை
நாம் கேட்டு இருக்கிறோம்,
அப்படி ஒரு விமர்சனத்தை
நம்மை நோக்கி சிலர் கூறும்
போது,
நாம் அவ் விமர்சனத்தை
கேட்டு வருத்தபடுவோம்
அல்லவா!
கோபத்தை கட்டுப்படுத்தாமல்
இருந்தால்,
பொது வாழ்வில் நம்மால் ஈடுபட முடியாது!
குடும்பத்தினரும் நம்மை விரும்ப மாட்டார்கள்!
கணவன் மனைவிடையே
பிணக்குகள் எற்படும்!
கோபத்தால் வார்த்தை தவறிவிடும்.
உறவுகளில் விரிசல் எற்ப்படும்
இப்படி தொடர்ந்து கோபப்படுபவர்கள் தலைவலி,
இரத்த அழுத்தம்,
நரம்புத் தளர்ச்சி, மற்றும் சில
வியாதியாலும் உடல் பாதிப்படைய வாய்ப்புண்டு!
கோபம் வரும் சுழ்நிலை எற்ப்பட்டால்,
அந்த இடத்தை விட்டு அகன்று
விடுவது நல்லது.
கடும் கோபத்தில் எந்த முடிவும் எடுக்காமல்
இருப்பது நல்லது,
எல்லாவற்றையும் மீறி பாதிக்கப்பட்டவர
ுக்கு கோபம் வந்தால்,
மன அமைதியே மேல்
என்பதை அறிந்து நடந்து கொள்வது நல்லது,
அவ்வாறு உணர்ந்து கொண்டால்,
கோபம் கட்டுப்படும்!
நன்றி - Nizam
Madheena fancy &chappal.

Comments