பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள

பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்..

தன் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கவனிக்க வேண்டியது பெற்றோர்களின் வளர்ப்பில் இருக்க வேண்டிய முக்கிய அம்சம்..

பள்ளியில், தெருக்களில், விடுமுறைகளில் உறவினர் வீட்டில் தங்கும் சமயங்களில் இப்படி எல்லா சூழ்நிலைகளிலும் தன் பிள்ளை யாரோடு பழகுகிறான் யாரோடு நெருங்கிய நட்பு வைத்துள்ளான் என்பதை கவனித்து அவனை வழிநடத்த வேண்டியது பெற்றோர்களின் முக்கிய பொறுப்பு.. இது ஒன்றும் பெரிய வேலையில்லை..

உங்களின் வேலைகளால் பிள்ளைகளை கவனிப்பதில்லை என்பதே உண்மை..

தந்தைக்கு பொருளாதாரத்தை திரட்டும் வெளி வேலை. அல்லது வெளிநாட்டு வாழ்க்கை..

தாய்க்கு கணவனோடு ஃபோனில் நேரம் கணக்கிடாமல் பேசுவது, ஊர் விஷயங்களை அக்கம்பக்கத்தாரோடு பகிர்ந்து கொள்வது,அல்லது டி.வியில் அமர்ந்து விடுவது, போன்ற வாழ்க்கைக்கு அவசியமான வேலை..

இந்த வேலைகளுக்கிடையில் தான் பிள்ளைகள் உங்களுக்கு தூரமாகி போகிறார்கள்..

உங்களில் எத்தனை பேர் உங்கள் பிள்ளை எந்த துறையில் ஆர்வமுள்ளவன் என அறிந்து வைத்துள்ளீர்கள்..
ஓவியம், கணிதம், கைவினை பொருட்கள், எழுத்து துறை, பேச்சுத்துறை, அல்லது மார்க்க படிப்பு என அவனுக்குள் எதாவது திறமை கொஞ்சம் கொஞ்சம் துளிர்விடலாம், அதை கவனித்து உற்சாக படுத்துங்கள்..

தன் பிள்ளைகள் கையில் வைத்திருக்கும் செல்ஃபோனை அடிக்கடி சோதித்து பார்த்து சேமிப்பில் உள்ள தொடர்பு எண்கள் யார் யார் என அறிந்துகொள்வதில்லை..

inbox, sent items என அனைத்திலும் யாருடைய பதிவுகள் இருக்கின்றது என்று கவனிக்க கூட பல பெறோருக்கு நேரமில்லை.சில பெற்றோர்கள் என் பிள்ளைகள் தப்பே செய்ய மாட்டான் என்று குருட்டு நம்பிக்கையில் கவனிப்பது இல்லை..

அப்றம் எப்டி புள்ள உருப்புடும்..??

பெண்ணுடைய பெயரை ஆண் பெயரில் சேமித்து வைக்கும் பிள்ளைகளை தான் இன்றைய பெற்றோர்கள் வெள்ளந்தியாக நம்புகிறார்கள்..

Raam என்று சேமித்து வைத்துள்ள எண் Ramya-வாக கூட இருக்கலாம்..

(இதே தான் பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கும்)

Comments