உள்ளத்தூய்மை

உள்ளத்தூய்மை
----------------------------------
இறைவனுக்காக செய்யும் மனிதனின் சேவைகள்
வணக்கவழிபாடுகள் இரண்டு வகையாக
அமைந்துள்ளது
ஒன்று இறைவனின் திருப்தியை நாடி செய்யும்
காரியங்கள்
மற்றொன்று இறைவனின் திருப்தியும் வேண்டும்
அதே நேரத்தில் அதை செய்வதின் மூலம் உலகில்
புகழும் அந்தஸ்த்தும் பெற வேண்டும் என்ற
எண்ணங்களோடு கூடிய நற்செயல்கள்
அதனால் தான் அர்ப்பமான சில
தானதர்மங்களை செய்து விட்டு
அதன் மூலம் பிறர்கள் புகழ்வதை விரும்புகின்ற
மனிதனைப் பார்க்கின்றோம்
பள்ளிவாசலில்
மாட்டுவதற்க்கு ஒரு கிளாக்கை கொடுத்தாலும்
ஏன் ஒரு டியூப்லைட்டை வாங்கி கொடுத்தாலும்
அன்பளித்தவர்
என்ற
வாசகத்தோடு தனது பெயரை பதித்து தருபவர்களே முஸ்லிம்
சமூகத்தில் அதிகம்
கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்களும்
கூட அதை இறைவன் அங்கீகரிப்பானா ?
என்ற பய உணர்வு இல்லாமல் தங்களை
அல்ஹாஜ் என்றும் ஹாஜியார் என்றும்
அழைக்கப்படுவதை விரும்புகின்ற
மனிதர்களை பார்க்கின்றோம்
தனது வீட்டை குடும்பத்தை சொத்தை சொந்த
நாட்டை தியாகம் செய்த சத்திய சஹாபாக்களில்
எவரும் இது போன்ற புகழை விரும்பியதில்லை
காரணம் என்ன நீங்கள் இறைவனுக்காக செய்யும்
காரியங்கள்
எந்தளவிற்க்கு பெரியது மதிப்பு வாய்ந்தது என்று இறைவன்
பார்ப்பதில்லை
மலை அளவிற்க்கு நீங்கள் தர்மம் செய்தாலும்
அதில் தூய்மையான எண்ணமில்லையானால்
நரகையே அடைவீர்கள்
குண்டூசியளவிற்கு நீங்கள் தர்மம் செய்தாலும்
அது தூய்மையாக இருந்தால் அதனால் சுவனம்
செல்வீர்கள்
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﻟَﺎ ﺗُﺒْﻄِﻠُﻮﺍ ﺻَﺪَﻗَﺎﺗِﻜُﻢ ﺑِﺎﻟْﻤَﻦِّ ﻭَﺍﻟْﺄَﺫَﻯٰ ﻛَﺎﻟَّﺬِﻱ ﻳُﻨﻔِﻖُ ﻣَﺎﻟَﻪُ
ﺭِﺋَﺎﺀَ ﺍﻟﻨَّﺎﺱِ ﻭَﻟَﺎ ﻳُﺆْﻣِﻦُ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻟْﺂﺧِﺮِ ۖ ﻓَﻤَﺜَﻠُﻪُ ﻛَﻤَﺜَﻞِ ﺻَﻔْﻮَﺍﻥٍ ﻋَﻠَﻴْﻪِ ﺗُﺮَﺍﺏٌ
ﻓَﺄَﺻَﺎﺑَﻪُ ﻭَﺍﺑِﻞٌ ﻓَﺘَﺮَﻛَﻪُ ﺻَﻠْﺪًﺍ ۖ ﻟَّﺎ ﻳَﻘْﺪِﺭُﻭﻥَ ﻋَﻠَﻰٰ ﺷَﻲْﺀٍ ﻣِّﻤَّﺎ ﻛَﺴَﺒُﻮﺍ ۗ ﻭَﺍﻟﻠَّﻪُ ﻟَﺎ
ﻳَﻬْﺪِﻱ ﺍﻟْﻘَﻮْﻡَ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ ﴿ 2:264 ﴾
நம்பிக்கை கொண்டவர்களே!
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும்
நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக்
காட்டுவதற்காகவே தன் பொருளைச்
செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச்
சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும்
உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்)
பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச்
செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப்
பாறையாகும்; அதன் மேல் சிறிது மண்
படிந்துள்ளது; அதன்
மீது பெருமழை பெய்து (அதிலிருந்த
சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது;
இவ்வாறே அவர்கள் செய்த -
(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய
மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான
மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை

.
நட்புடன் இம்தாதி...... ...

Comments