அர்ஷின் நிழல்


அர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார் யார்?

மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு கூட்டத்தாருக்கு நிழல் வழங்குவான். அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது.

1. நீதமிகு தலைவர்
2. அல்லாஹ்வை வணங்கியே தனது இளமையை கழித்த வாலிபர்
3. மஸ்ஜித்களுடன் இதய பூர்வத் தொடர்பு கொண்ட மனிதர்.
4. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்.
5. அழகும், கவர்ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்று கூறி மறுத்த  மனிதன்.
6. தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு (இரகசியமாக) செலவு செய்யும் மனிதன்.
7. தனிமையில் இறையச்சத்தின் காரணமாக அழும் மனிதன்.
அறிவிப்பவர்: அபூஹுரைறா (ரலி)
நூல்: புகாரி 6806
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

Comments