சர்வதேசப் பிறையும் மத்ஹபுகளும்


முஸ்லிம்களின் பிரதான வணக்கங்களில் ஒன்றான நோன்பையும், மற்றும் இரு பெருநாட்களையும் தீர்மானிப்பதற்கு இறைவன் பிறையை அளவுகோலாக்கியுள்ளான் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். இவ்விடயத்தில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முஸ்லிம்களிடத்தில் காணப்படுகின்றது. பிறை விவகாரத்தில் மத்ஹபுகள்
எவ்வாறான கருத்துக்களைக் கொண்டுள்ளன என்பதை தெரியப்படுத்துவதே எமது இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.
وَلَا عِبْرَةَ بِاخْتِلَافِ الْمَطَالِعِ  فإذا رَآهُ أَهْلُ بَلْدَةٍ ولم يَرَهُ أَهْلُ بَلْدَةٍ أُخْرَى وَجَبَ عليهم أَنْ يَصُومُوا بِرُؤْيَةِ أُولَئِكَ إذَا ثَبَتَ عِنْدَهُمْ بِطَرِيقٍ مُوجِبٍ وَيَلْزَمُ أَهْلَ الْمَشْرِقِ بِرُؤْيَةِ أَهْلِ الْمَغْرِبِ
البحر الرائق2\290
ஹனபி மத்ஹபைப் பின்பற்றும் ஹனபிய்யாக்கள் பிறை விடயத்தில் கூறும் கருத்துக்களை நோக்குவோம். இது தொடர்பாக இப்னு நஜ்ம் அவர்கள் தமது ‘அல்பஹ்ருர் ராயிக்’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.
‘ஓர் ஊரில் உள்ளவர்கள் பிறையைக் கண்டு வேறொரு ஊரில் உள்ளவர்கள் அதைக் காணாத வேளையில் இவர்கள் கண்ட பிறையின் தகவல் ஊர்ஜிதமானது என நிரூபணமானால் இவர்களது தகவலை வைத்து பிறையைக் காணாதவர்கள் நோன்பு நோற்பது அவசியமாகும். மேலும், மேற்கில் உள்ளவர்கள் பிறை காண்பதன் மூலம் கிழக்கில் உள்ளவர்களுக்கு (நோன்பு நோற்பது) அவசியமாகும்.’ (நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம்-2 பக்கம்-290) இதே கருத்தை ஹனபி மத்ஹபின் பிரபல்யமான நூலாகிய ‘துர்ருல் முஹ்தார்’ பாகம்-2 பக்கம்-433 இலும் ‘ரத்துல்; முஹ்தார்’     பாகம்-7 பக்கம்-386 இலும் காணலாம்.
மேலும் இது தொடர்பாக ‘ஷரஹு பத்ஹுல் கதீர்’ என்ற நூல் பின்வருமாறு கூறுகின்றது.
وإذا ثبت في مصر لزم سائر الناس فيلزم أهل المشرق برؤية أهل المغرب في ظاهر المذهب   شرح فتح القدير2/313
‘ஓர் பட்டணத்தில் பிறை தென்பட்டது உறுதியானால் ஏனய மனிதர்கள் அதை ஏற்றுக் கொள்வது அவசியமாகும். மேலும், மத்ஹபின் வெளிப்படையான கருத்தின் அடிப்படையில் மேற்கில் உள்ளவர்கள் பிறை காண்பதன் மூலம் கிழக்கில் உள்ளவர்களுக்கு (நோன்பு நோற்பது) அவசியமாகும். (நூல்: ஷரஹு பத்ஹுல் கதீர் பாகம்-2 பக்கம்-313)மேற்கூறப்பட்ட ஹனபி மத்ஹபுக்; கருத்துக்கள்; அனைத்தும் சர்வதேசப் பிறையை உறுதிப்படுத்தும் வகையில் கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். எனவே, பிறை விவகாரத்தில் ஹனபி மத்ஹப் சர்வதேசப் பிறையை சரிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
அடுத்து மாலிக் மத்ஹபைப் பின்பற்றும் மாலிகிய்யாக்கள் பிறை விடயத்தில் கூறும் கருத்துக்களை நோக்குவோம். ‘பிறை காணப்பட்டால் நோன்பு நோற்பது ஊர், நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளும். அது  தூரமாக இருந்தாலும் சமீபமாக இருந்தாலும் சரியே! இவ்விடயத்தில் தொழுகையை சுருக்கித் தொழும் தூரத்தையோ, பிறையின் தோற்றம் ஒன்று படுவதையோ அல்லது மாறுபடுவதையோ கவனிக்கப்படமாட்டாது. இரண்டு நீதமானவர்கள் அல்லது ஒரு கூட்;டத்தாரின் சாட்சி உறுதிப்படுத்தப்பட்டு யாரையெல்லாம் சென்றடைகின்றதோ அவர்கள் மீது நோன்பு நோற்பது கடமையாகும்.’
இக்கருத்தை   ‘ஷரஹு முஹ்தஸர் ஹலீல்’ என்ற நூலில் பாகம்-6 பக்கம்-461 இலும் அஷ்ஷரஹுல் கபீர் என்ற நூலில் பாகம்-1 பக்கம்;-510 இலும் காணலாம்.
إذا رئي الهلال، عمَّ الصوم سائر البلاد، قريباً أو بعيداً، ولا يراعى في ذلك مسافة قصر، ولا اتفاق المطالع، ولا عدمها، فيجب الصوم على كل منقول إليه، إن نقل ثبوته بشهادة عدلين أو بجماعة مستفيضة رأى الهلال ولا يشترط أن يكونوا كلهم ذكورا أحرارا عدولا (وعم) الصوم سائر البلاد قريبا أو بعيدا ولا يراعى في ذلك مسافة قصر ولا اتفاق المطالع ولا عدمها فيجب الصوم على كل منقول إليه (إن نقل) ثبوته (بهما) أي بالعدلين أو بالمستفيضة   الشرح الكبير1/510
وَعَمَّ الْحُكْمُ بِوُجُوبِ الصَّوْمِ كُلَّ مَنْقُولٍ إلَيْهِ أَيْ : مِنْ سَائِرِ الْبِلَادِ قَرِيبًا ، أَوْ بَعِيدًا وَلَا يُرَاعَى فِي ذَلِكَ اتِّفَاقُ الْمَطَالِعِ وَلَا عَدَمُهُ وَلَا مَسَافَةُ الْقَصْرِ مختصر خليل الْخَرَشِيُّ  6/461 شرح
மேற்கூறப்பட்ட மாலிக் மத்ஹபுக்; கருத்துக்கள்; அனைத்தும் சர்வதேசப் பிறையை உறுதிப்படுத்தும் வகையில் கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். எனவே, பிறை விவகாரத்தில் மாலிக் மத்ஹபு சர்வதேசப் பிறையை சரிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
அடுத்து, ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றும் ஹன்பலிய்யாக்கள் பிறை விடயத்தில் கூறும் கருத்துக்களை நோக்குவோம். ஹன்பலி மத்ஹபு நூலாகிய ‘கஷ்ஷாபுல் கனாஃ’ என்ற நூலில் பாகம்-2 பக்கம்;-303 இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
وإذا ثبتت رؤية الهلال بمكان قريبا كان أو بعيدا لزم الناس كلهم الصوم وحكم من لم يره حكم من رآه  لقوله صلى الله عليه وسلم صوموا لرؤيته وهو خطاب للأمة كافة كشاف القناع2 / 303
‘ஓர் இடத்தில் பிறை தென்பட்ட விடயம் நிரூபணமானால் அது தூரமாக இருந்தாலும், சமீபமாக இருந்தாலும் சரி மனிதர்கள் அனைவரும் நோன்பு நோற்பது அவசியமாகும். பிறையைக் கண்;டவருக்குரிய சட்டமே அதைக் காணாதவருக்கும் கொடுக்கப்படும். ஏனெனில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள் எனக்கூறியுள்ளார்கள். இந்த ஏவல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தினர் அனைவருக்கும் உரியதாகும்.’ மேற்கூறப்பட்ட ஹன்பலி மத்ஹபுக் கருத்தும்; சர்வதேசப் பிறையை உறுதிப்படுத்தும் வகையில் கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். எனவே, பிறை விவகாரத்தில் ஹன்பலி மத்ஹபு சர்வதேசப் பிறையை சரிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
அடுத்து, ஷாபி மத்ஹபைப் பின்பற்றும் ஷாபிய்யாக்கள் பிறை விடயத்தில் கூறும் கருத்துக்களை நோக்குவோம்.
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் எழுதிய  ஷாபி மத்ஹபு நூலாகிய அல்மின்ஹாஜ் என்ற நூலில் பாகம்-1 பக்கம்-104 இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
إذَا رُئِيَ بِبَلَدٍ لَزِمَ حُكْمُهُ الْبَلَدَ الْقَرِيبَ دُونَ الْبَعِيدِ فِي الْأَصَحِّ، وَالْبَعِيدُ مَسَافَةُ الْقَصْرِ، وَقِيلَ بِاخْتِلَافِ الْمَطَالِعِ، قُلْتُ: هَذَا أَصَحُّ، وَاَللَّهُ أَعْلَمُ. المنهاج 1/104
‘மிகச் சரியான கூற்றின் பிரகாரம் ஓர் ஊரில் பிறை காணப்பட்டால் அதன் சட்டம் தூரமான ஊர் அன்றி சமீபமான ஊருக்கு மாத்திரம் அவசியமாகும். தூரம் என்பது தொழுகையை சுருக்கித் தொழக்கூடிய பிரயாண அளவாகும். பிறையின் தோற்றம் மாறுபடுதல் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதான் மிகச் சரியானதாகும். அழ்ழாஹ் மிக அறிந்தவன்.’
والصحيح عند أصحابنا أن الرؤية لا تعم الناس بل تختص بمن قرب على مسافة لا تقصر فيها الصلاة وقيل ان اتفق المطلع لزمهم وقيل ان اتفق الاقليم والا فلا وقال بعض أصحابنا تعم الرؤية في موضع جميع أهل الأرض فعلى هذا نقول انما لم يعمل بن عباس بخبر كريب لأنه شهادة فلا تثبت بواحد لكن ظاهر حديثه أنه لم يرده لهذا وانما رده لأن الرؤية لم يثبت حكمها في حق البعيد (شرح النووي على صحيح مسلم 7/197)
மேலும் நவவி (ரஹ்) அவர்கள் தமது ‘ஷரஹுன் நவவி அலா ஸஹீஹி முஸ்லிம்’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘எங்கள் தோழர்களிடத்தில் சரியான கூற்று பிறை கண்டால் மனிதர்கள் அனைவரையும் அது பொதுவாக்காது. எனினும் தொழுகையை சுருக்கித் தொழும் தூரத்தில் உள்ளவர்களை உள்ளடக்கிக் கொள்ளும். பிறையின் தோற்றம் ஒன்றுபடும் தூரத்தில் உள்ளவர்களுக்கு அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் மாகாணங்கள் ஒன்றுபட்டாலும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறில்லையானால் அவசியமில்லை. எங்கள் தோழர்களில் சிலர் ஒரு இடத்தில் பிறை கண்டால் அது பூமியிலுள்ள அனைவரையும் உள்ளடக்கிக் கொள்ளும் என்றும் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைப் (ரஹ்) அவர்களின் பிறைச் செய்தியை அமுல்படுத்தவில்லை என்று நாம் கூறுகிறோம். ஏனெனில், அந்த சாட்சி ஒருவருடையதாகும். என்றாலும் ஹதீதுடைய வெளிப்படையை நோக்கும் போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைபின் சாட்சியை இதற்காக மறுக்கவில்லை. மாறாக, அந்த சட்டம் தூரத்தில் உள்ளவர்களின் விடயத்தில் பொருந்தாது என்பதற்காகத்தான் மறுத்தார்கள். (நூல்: ஷரஹுன் நவவி அலா ஸஹீஹி முஸ்லிம் பாகம்-7 பக்கம்-197)
அதேபோன்று ‘பிக்ஹுஸ் ஸாயிமீன் மின் மின்ஹாஜித் தாலிபீன்’ என்ற நூலில் பாகம்-1 பக்கம்-7 இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
وإذا ثبت الهلال ببلد عم الحكم جميع البلدان التي تحت حكم حاكم بلد الرؤية، وإن تباعدت إن اتحدت المطالع، وإلا لم يجب صوم ولا فطر مطلقا  فِقهُ الصَّائمِين من مِنهَاج الطَّالبِين   1/7
‘ஓர் பிரதேசத்தில் பிறை தென்பட்ட விடயம் உறுதியானால் பிறை தென்பட்ட பிரதேசத்தின் ஆட்சியாளரின் அதிகாரத்தின் கீழ் உள்;ள அனைத்துப் பிரதேசத்தையும் அச்சட்டம் உள்ளடக்கிக் கொள்ளும். பிறையின் தோற்றம் ஒன்றுபட்டு பிரதேசங்கள் தூரமாய் இருந்தாலும் சரி. மேற்கூறிய அடிப்படையில் இல்லாவிட்டால் பொதுவாக நோன்பு நோற்பதோ விடுவதோ அவசியமாகாது. (நூல்: பிக்ஹுஸ் ஸாயிமீன் மின் மின்ஹாஜித் தாலிபீன் பாகம்-1 பக்கம்-7)
மேற்கூறப்பட்ட மத்ஹபுக் கருத்துக்களை அவதானிக்கும் போது ஷாபி மத்ஹபைத் தவிர மற்ற மூன்று மத்ஹபுகளும் சர்வதேசப் பிறையை சரிகண்டிருப்பதை அவதானிக்கலாம். ஷாபி மத்ஹபைச் சேர்ந்த பின்வரும் அரிஞர்களான லைதி, ஸைமரி, காழி அபுத்தய்யிப், அத்தாரிமி, அபு அலி அஸ்ஸின்ஜி போன்றோர் சர்வதேசப்பிறையை சரிகண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை நவவி (ரஹ்) அவர்கள் தமது அல்மஜ்மூஃ என்ற நூலில் பாகம-6 பக்கம்-273 இல் குறிப்பிட்டுள்ளார்கள். அதன் மூல வார்த்தை பின்வருமாறு:
إذا رأوا الهلال في رمضان في بلد ولم يروه في غيره فان تقارب البلدان فحكمهما حكم بلد واحد ويلزم أهل البلد الآخر الصوم بلا خلاف وان تباعدا فوجهان مشهوران في الطريقتين (اصحهما) لا يجب الصوم على أهل البلد الاخرى وبهذا قطع المصنف والشيخ أبو حامد والبندنيجي وآخرون وصححه العبدرى والرافعي والاكثرون (والثانى) يجب وبه قال الصيمري وصححه القاضي أبو الطيب والدارمى وابو علي السنجى(مجموع6\273
அதே போன்று ஷாபி மத்ஹபை சேர்ந்த பிரபல ஹதீஸ் கலை அறிஞரான இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்களும் சர்வதேசப் பிறையை சரிகண்டுள்ளார்கள். இமாமவர்கள் இதுபற்றிக் குறிப்பிடும் போது ‘பத்ஹுல் பாரி’ என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
” حَتَّى تَرَوْهُ “وَقَدْ تَمَسَّكَ بِتَعْلِيقِ الصَّوْمِ بِالرُّؤْيَةِ مَنْ ذَهَبَ إِلَى إِلْزَامِ أَهْلِ الْبَلَدِ بِرُؤْيَةِ أَهْلِ بَلَدِ غَيْرِهَا ، وَمَنْ لَمْ يَذْهَبْ إِلَى ذَلِكَ قَالَ لِأَنَّ قَوْلَهُ  خِطَاب لِأُنَاسٍ مَخْصُوصِينَ فَلَا يُلْزَمُ غَيْرهمْ ، وَلَكِنَّهُ مَصْرُوفٌ عَنْ ظَاهِرِهِ فَلَا يَتَوَقَّفُ الْحَالُ عَلَى رُؤْيَةِ كُلٍّ وَاحِدٍ فَلَا يَتَقَيَّدُ بِالْبَلَدِ (فتح الباري6\149
(சுருக்கம்) ஹத்தா தரவ்ஹு என்ற சொல் குறிப்பிட்ட சில மனிதர்களை மாத்திரம் சொந்தப்படுத்தக்கூடிய முன்னிலைச் சொல் என்றும் மற்றவர்களை உள்ளடக்காது என்றும் கூறுவது ஹதீஸின் வெளிப்படையை விட்டும் திருப்பப்பட்டதாகும். ஒவ்வொருவரும் பிறை பார்க்க வேண்டும் என்ற நிலை நிலையில்லாதது ஆகும். மேலும் ஒரு ஊரை மாத்திரம் வரையறுக்கவும் கூடாது. (நூல் பத்ஹுல் பாரி பாகம்-6 பக்கம்-149)
மேலும் ஷாபி மத்ஹபின் சரியான கருத்து தொழுகையை சுருக்கித் தொழக்கூடிய பிரயாண அளவாகும். நமது நாட்டில் உள்ள ஷாபிய்யாக்கள் பிறை விடயத்தில் தமது மத்ஹபு கூறும் சரியான கருத்தை எடுக்கின்றார்களா என்பதும் கேள்விக்குறியாகும்.
எனவே, அல்குர்ஆன் அல்ஹதீஸை மத்ஹபுகளினூடாகத்தான் அனுக வேண்டும் என்ற விபரீத கருத்தைக் கொண்டிருப்பவர்கள் மற்றும் மத்ஹபுகள்  ‘இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியங்கள்’ என மார்தட்டுபவர்கள் குறைந்தபட்சம் மத்ஹபுகள் வலியுறுத்தும் சர்வதேசப் பிறையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு நடைமுறையில் செயல்வடிவம் கொடுத்து ‘தாங்கள் கூற்றில் உண்மையாளர்கள்’ என நிரூபிக்க முன்வருவர வேண்டும்.


மௌலவி B.M. அஸ்பர் (பலாஹி)

Comments