Saturday, March 01, 2014

பெரும் குற்றங்கள்

சிறிதாகதோன்றும் பெரும் குற்றங்கள்

நிச்சயமாக நீங்கள் சில விஷயங் களைச் செய்கின்றீர்கள், அது உங்கள் கண்களில் முடியைவிட சாதாரணமா னது. ஆனால் அதை நபி(ஸல்) அவர் கள் காலத்தில் நாங்கள் (மனிதர்களை) அழிக்கக் கூடியதாக நினைத்தோம். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) நூல் : புகாரி அன்றைய காலத்தில் மக்கள் சிறிய பாவத்தைப் பெரியதாக நினைத்து அல்லாஹ்விற்கு அஞ்சி அதை முற்றிலும் தவிர்த்து வந்தார்கள். ஆனால் தற்போது பெரிய பாவத்தை யும் கூட சாதாரணமாக செய்து வருகி றார்கள். அப்படி மக்கள் செய்து கொண் டிருக்கும் அலட்சியமாக கருதும் ஆபத்தான ஒரு சில குற்றங்களை நாம் கீழே ஆதாரப்பூர்வமாக காண்போம். சகுனம் பார்த்தல்: அறியாமைக் கால அரபியர்கள் ஒரு பறவையைப் பிடித்து பறக்க விட்டு அது வலப்புறம் பறந்தால் நற்சகுணமாக நினைத்து காரியத்தை செய்யக் கூடியவர்களாகவும் இடப் புறமாக பறந்தால் கெட்ட சகுனமாக நினைத்து அக்காரியத்தைத் தவிர்க் கக் கூடியவர்களாகவும் இருந்து வந்தனர். அவர்கள் செய்து வந்த
அந்த விஷயத்தை அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து கொண்டு இருக்கும் இக்கால மக்களும் அலட்சியமாக செய்து வருகிறார்கள். ஆனால் அது ஆபத்தான குற்றத்தில் ஒன்றான ஷிர்க் ஆகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: சகுனம் பார்ப்பது ஷிர்க் ஆகும். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி) நூல் : அஹ்மது
இவ்வாறாக இந்த அலட்சியமாக கருதும் காரியம் ஷிர்க்கில் விழச் செய்து நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும், இத்தகைய ஆபத்தான நிலையை இந்த சகுனம் பார்த்தல் ஏற்படுத்துகிறது. இதனை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
விவாகரத்து (தக்க காரணமின்றி)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தகுந்த காரணமின்றி தன் கணவனிட மிருந்து தலாக் கோறும் பெண்ணுக்கு சுவனத்தின் வாடை ஹராம் ஆக்கப்படும். அறிவிப்பவர் : சௌபான்(ரலி) நூல் : அஹ்மது
நாம் வாழும் இந்த கால கட்டத்தில் எதற்கு எடுத்தாலும் தலாக் என்ற வார்த்தை தான் கணவன் லி மனைவிக்கு இடையே வருகிறது. ஒருவன் மூன்று முறை தலாக் செய்து விட்டால் முழுமையான பிரிவு ஏற்பட்டு விடுகிறது. குழம்பில் ஒரு நாள் காரமோ, உப்போ அதிகமாக ஆகிவிட்டால் அதில் ஆரம்பிக்கும் சண்டை இறுதியில் முடிவது ‘தலாக்’ இவ்வாறு அலட்சியமாக அந்த வார்த்தையை பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். தலாக் ஆன பிறகு தான் அதன் விளைவு ஆரம்பமாகிறது. அவள் சீரழிவது அவளுடைய குழந்தைகள் சீரழிவது என பல இன்னல் களை சந்திக்க வேண்டியதாகிறது. சாதாரண விஷயத்திற்கெல்லாம் அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தும் இந்த தலாக் என்பதை அலட்சிய மாக செய்து பெரும் குற்றவாளியாவதில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை
பெண்கள் வாசனை பூசிக் கொண்டு வெளியே செல்வது: பெண்கள் வாசனை பூசிக் கொள் ளுதல் ஆகுமானது, வீடுகளில் இருக்கும் போதும், தன் கணவனு டன் இருக்கும் போதும் தான் இந்த அனுமதி அப்படியல்லாமல் அதனை வெளியில் செல்லும் போது பூசிக் கொண்டு செல்வது மார்க்கத்தில் கூடாத செயலாகும். கடைவீதிக்குச் செல்லும் போது, திருமணத்திற்குச் செல்லும் போது, நறுமணம் பூசிக் கொண்டு ஆண் களைக் கடந்து செல்கிறார்கள். இதை நபி(ஸல்) அவர்கள் வன்மை யாக கண்டித்தும் இது நமது பெண் களிடையே மிகுதியாக பரவி நிற்கும் தீமையாக இருக்கிறது.
இதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் : ஒரு பெண் நறுமணம் பூசி அதை ஆண்கள் நுகர வேண்டு மென்பதற்காக அவர்களிடையே நடந்து சென்றால் அவள் ஒரு விபச்சாரியாவாள். நூல் : அஹ்மது தந்தையை மாற்றிக் கூறுதல்:
தன் தந்தையை யார் என்பதை தெரிந் தும் அவர் அல்லாதவருடன் தன்னை இணைத்துக் கூறுபனுக்கு சுவனம் ஹராமகும். அறிவிப்பவர் : அபூ பக்ர்(ரலி) நூல் : புகாரி இவ்வாறாக தந்தையை மாற்றிக் கூறுவதை அலட்சியமாக நினைத் துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களை வளர்த்தவர்களைப் பற்றி வளர்ப்புப் பிள்ளைகள் சிலர் இவ்வாறுகூறுகின்றனர். ஆனால் அந்த அலட்சியமான குற்றம் சொர்க்கத் தையே ஹராமாக்கும் அளவிற்கு மாபாதகமாகும். இவ்வாறான குற்றங்களில் சிலவற்றை மட்டுமே மேற்கண்ட விபரங்களில் நாம் காண்கிறோம். இன்னும் பல விஷயங்களை நாம் அலட்சியமாக செய்து வருகிறோம். எனவே நமது செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் குர்ஆன், ஹதீஸின் வழிகாட்டுதல் படி அமைத்துக் கொள்ள வேண்டும்! இப்படி நாம் அலட்சியமாக கருதி செய்யக்கூடிய ஒவ்வொரு குற்றமும் பின்னால் மிகப்பெரிய குற்றமாக மாறி அதற்குரிய பலனான தண்ட னையை இம்மையிலோ, மறுமை யிலோ அனுபவிக்கக் கூடிய நிலைமை ஏற்படலாம்!