Wednesday, December 31, 2014

இஸ்லாமியப் பார்வையில் புத்தாண்டு இஸ்லாமியப் பார்வையில் புத்தாண்டு
இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கமாகும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்கு சொந்தக்காரன் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் அவன்தான் கடவுளாவான். எனவே அவன் படைத்த நாட்களை பற்றி அவன் கூறுவதை பாருங்கள் .
                    (9:36) ...إنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْض
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டு ஆகும்... அல் குர்ஆன் : 9:36
எனவே இறைவன் கொடுத்த பனிரெண்டு மாதங்களில் நல்லது கெட்டது என்று பார்ப்பது கூடாது.

Tuesday, December 16, 2014

العلاج والمرأة المسلمةالعلاج  والمرأة المسلمة

بسم الله الرحمن الرحيم
إلى متى يااولياء الأمور هذا التهاون البغيض منا في تدبير اهم شئوننا حساسا؟ لقد لبثت مليّا حينا من الدهر افكر في شأن كاد يفطر قلبي. سؤالي هنا مباشرة.ما موقف الدين في معالجة الطبيب الكافر للمرأة المسلمة ؟ خاصة في شئون الولادة ؟ إن كان أباح للضرورة. وماحدّ الضرورة؟ هذا الذى يجرى الأن لآ لاف المسلمات من الكشف للولادة على ايدى هؤلاء الكفرة. ايعتبر هذا ضرورة ؟ ام وهن  ولا مبالاة  قذفه الله فى قلوب الرجال جزاء التفريط في الأمر هذا.

Sunday, December 14, 2014

பன்றி இறைச்சியை இஸ்லாம் தடை செய்திருப்பது ஏன்?

பன்றி  இறைச்சியை இஸ்லாம் தடை செய்திருப்பது ஏன்?

(தற்போது சில கிறிஸ்தவ தளங்களில் பைபிளில் தடைசெய்யப்பட்ட இயேசுவால் தடுக்கப்பட்ட - அதே சமயம் பவுலால் அனுமதிக்கப்பட்ட பண்றியின் மாமிசத்தை (PORK) உண்ணலாம் என்று போலி உமரால் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கட்டுரைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியிலேயே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதுடன், அந்த கட்டுரையில் உள்ள மடத்தனமான - முட்டாள்தனமான வாதங்களுக்கும் பதிலாக அவர்களாலேயே எதிர் கேள்விகள் எழுப்பப்பட்டு பதிவுகள் இடப்பட்டுள்ளது. (புகழனைத்தும் இறைவனுக்கே)
பண்றியின் மாமிசத்தை உண்ணுவது என்பது இயேசுவின் கொள்கைக்கும் பழைய ஏற்பாட்டுக் கொள்கைக்கும் எதிரான ஒன்று

Monday, December 08, 2014

42 அபூஅய்யூப் அல் அன்ஸாரி

அபூஅய்யூப் அல் அன்ஸாரி
أبو أيوب الأنصاري

ஸ்தான்புல் துருக்கி நாட்டில் அமைந்துள்ள பெரும் நகரம். பெரும்பாலனவர்கள் அறிந்திருப்பீர்கள்; கலர் கலராய்ப் புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். பழம் பெருமை வாய்ந்த நகரம் இது. ரோமர்களின் ஆட்சிக் காலத்தின்போது செல்வச் செழிப்புடன் திகழ்ந்த இந்நகரத்துக்கு கான்ஸ்டன்டினோபில் (Constantinople) என்று பெயர். கி.மு. காலத்திலிருந்து துவங்கி நீண்ட நெடிய வரலாற்றுச் சங்கதிகளைத் தன்னுள் புதைத்து வைத்துள்ள இந்நகரை நிறுவியவன் ரோமச் சக்கரவர்த்தி முதலாம் கான்ஸ்டன்டைன். அதற்குமுன் இந்நகருக்கு பைஸாண்டியம் என்று பெயர்.
அப்பொழுது அது கிரேக்கர்களிடம் இருந்தது.
முஆவியா ரலியல்லாஹு அன்ஹு கடற்படை அமைத்து ரோமர்களை விரட்டிக் கொண்டே சென்றார் என்று முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோமில்லையா, பின்னர் அவர் மகன் யஸீத் இப்னு முஆவியா தலைமையில் முஸ்லிம்களின் படையொன்று இந்த கான்ஸ்டன்டினோபில்வரை வந்து முற்றுகையிட்டது. இந்தக் கடல்வழிப் போருக்கு மிகவும் வயது முதிர்ந்த பெரியவர் – காலித் இப்னு ஸைது என்பவரும் வந்திருந்தார். ஏறத்தாழ அவருக்கு எண்பது வயதிருக்கும். ‘பொழுது போகவில்லை; நானும் வருகிறேன்; வேடிக்கைப் பார்க்கிறேன்’ என்பது போலெல்லாம் இல்லை; வாளேந்தி, போரிட வந்திருந்தார் அவர்.

41 ஸயீத் இப்னு ஸைது

ஸயீத் இப்னு ஸைது
سعيد بن زيد
அவருக்குத் தாகமான தாகம்; தேடிக் கொண்டிருந்தார். அவரது தாகம் நா வறட்சித் தாகமன்று; அவர் தேடுவதும் தண்ணீரையன்று; வேறொன்றை.

மக்காவைச் சேர்ந்தவர் அவருக்கு இறைவழிபாடு என்று அங்கு நடைபெறும் கூத்தைக்கண்டு வெறுத்துப்போயிருந்தது. ‘இறைவனை மெய்யாக வழிபடும் மதம் எது; மார்க்கம் என்ன?’ என்று அவருக்குள் அடக்கமாட்டாத வேட்கை; தாகம். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் பற்றி, செவிவழியாகவும் முதியோர் சிலரிடம் மிச்சம் மீதி என்று தங்கியிருந்த உண்மையின் வாயிலாகவும் சில குறிப்புகள் அவருக்குத் தெரிந்திருந்தன. ‘உண்மையான இறை மார்க்கம் இதுதான்; உலகின் எங்கோ ஒரு மூலையில் இது இன்னும் இருக்க வேண்டும்’ என்று அந்தத் தேடலிலே ஊர் ஊராகத் திரிந்து, கழிந்துகொண்டிருந்தது அவரது வாழ்வு.
யூத மதம், கிறித்தவ மதம் என்று படித்துப் பார்த்தும் அவற்றில் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. “ம்ஹும்! இந்த மதங்கள் அதை முழுமையாகச் சொல்லவில்லையே! இவற்றிலும் என்னவோ குறைகிறதே; உண்மையிலிருந்து மாறுபட்டிருக்கின்றன இவை” என்று அவரது மனம் திருப்தியுற மறுத்தது.

40 அபூஹுரைரா அத்-தவ்ஸீ

அபூஹுரைரா அத்-தவ்ஸீ
أبو هريرة (عبد الرحمن بن صخر) الدوسي
ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டின்போது மதீனா வந்தடைந்திருந்தார் ஓர் இளைஞர். இஸ்லாம் அவரை அவர் பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு அங்கு இழுத்து வந்திருந்தது. திருமணம் ஆகாத இள வயதினரான அவருக்கு இருந்த ஒரே உறவு வயதான அவரின் தாய். நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயரும் முன்பே அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும் அவரின் அம்மா மட்டும் ‘அந்தப் புது மதம் உன்னுடனே இருக்கட்டும்; எனக்கு வேண்டாம்’ என்று இருந்துவிட்டார். ஆனால் சும்மா இல்லை. கோபம் இருந்தது; தன் மகன் தமது மூதாதையர் மார்க்கத்திலிருந்து வழிதவறிப் போய்விட்டானே என்று நிறைய கோபம் இருந்தது.

அதே நேரத்தில் மகனுக்கோ அம்மாவின் மீது அளவற்ற அக்கறை. இறைவனுக்கு இணைவைத்து, உருவ வழிபாட்டில் மூழ்கிப்போயிருக்கும் தன் தாய், மறுமையில் நிரந்தர நட்டத்தை அடையப்போவதை அவரால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. நாள்தோறும் தவறாமல், “அம்மா! ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளுங்கள். முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித்தூதர் என்பதை உணருங்கள்” என்று வாய்ப்பாடுபோல் அறிவுறுத்திக்கொண்டே இருந்தார் அவரும்.
அதையெல்லாம் கேட்டு ஆத்திரம்தான் அதிகமாகும் அம்மாவுக்கு. முகம் வேகமாக மறுபுறம் திரும்பிக்கொள்ளும். அதைக்கண்டு தொந்தரவு செய்யாமல் வருத்தத்துடன் சென்றுவிடுவார் மகன். பிறகு, அன்றோ, அடுத்த நாளோ அதே கதை மீண்டும் தொடரும்.

39 ஜஅஃபர் பின் அபீதாலிப்

ஜஅஃபர் பின் அபீதாலிப்
جعفر بن أبي طالب

ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு, முஹர்ரம் மாதம் யுத்தம் ஒன்று நடைபெற்றது. கைபர் யுத்தம். இஸ்லாமிய வரலாற்றில் அது ஒரு முக்கியமான யுத்தம். மதீனாவிற்கு வடக்கே ஏறத்தாழ 160 கி.மீ. தொலைவில் இருந்த கைபருக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமையில் படையெடுத்துச் சென்றிருந்தது முஸ்லிம்களின் படை.
அந்த நேரத்தில் முஸ்லிம்களின் குழு ஒன்று வெளிநாட்டில் இருந்து மதீனாவிற்கு வந்திருந்தது. நபியவர்கள் மக்காவில் இருக்கும்போது அங்கிருந்து அகதிகளாய் அபிஸீனிய நாட்டுக்குப் புலம்பெயர்ந்திருந்த அவர்கள், யத்ரிபிற்கு நபியவர்கள் புலம்பெயர்ந்து ஏழு ஆண்டுகள் கழிந்திருந்த நிலையில் இப்பொழுதுதான் வாய்ப்பு அமைந்து அபிஸீனியாவிலிருந்து நேரே மதீனா வந்து சேர்ந்திருந்தார்கள்.
நபியவர்கள் படையுடன் கைபர் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்ததும், அக்குழுவில் இருந்த ஒருவர், அத்தனை ஆண்டுகளாய் நபியவர்களைப் பிரிந்திருந்தவர், ‘இதற்குமேல் என்னால் முடியாது’ என்று வந்த சேர்ந்த பயணக் களைப்பையெல்லாம் உதறி உதிர்த்துவிட்டு உடனே கைபர் நோக்கி விரைந்தார். அவர் கைபர் வந்தடைந்த நேரம், ஒருவழியாய் முஸ்லிம்கள் யூதர்களை வெற்றி பெற்றிருந்த தருணம். அந்த மகிழ்வில் திளைத்திருந்த நபியவர்கள், விரைந்து வரும் இவரைக் கண்டுவிட்டார்கள். அப்பட்டமாய் இரட்டிப்பானது அவர்களது மகிழ்ச்சி.

38 ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலீ

ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலீ
جرير بن عبد الله البجلي
காதிஸிய்யாப் போர் என்று முன்னர் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே வந்தோம். பாரசீகர்களுடன் நிகழ்வுற்ற பிரம்மாண்ட போர் அது. ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் நான்கு நாட்களாய் நிகழ்ந்த மிக உக்கிரமான அந்தப் போரின் முதல் நாள் “அர்மாத் நாள்”, இரண்டாம் நாள் “அஃக்வாத் நாள்”, மூன்றாம் நாள் “இமாஸ் நாள்”, நான்காம் நாள் “காதிஸிய்யா நாள்” எனும் விபரங்களோடு அந்நாட்களை வரலாறு குறித்து வைத்திருக்கிறது.
அர்மாத் நாளன்று முஸ்லிம்களும் பாரசீகர்களும் போருக்கான அனைத்து வியூகங்களுடனும் களத்தில் அணிவகுத்து நின்றனர். தம் படைகளுக்கு உத்தரவுகள் அளித்துக் கொண்டிருந்தார் ஸஅத். “லுஹ்ருத் தொழுது முடியும்வரை இருக்கும் இடத்தைவிட்டு நகராதீர்கள். நீங்களெல்லாம் லுஹ்ருத் தொழுது முடித்தவுடன் நான் தக்பீர் முழங்குவேன். நீங்களும் பதிலுக்குத் தக்பீர் முழங்கித் தயாராகுங்கள். நினைவில் கொள்ளுங்கள்; உங்களுக்கு முன் வாழ்ந்தோருக்குத் தக்பீர் அளிக்கப்படவில்லை. உங்களுக்கு ஆதரவளிக்கவே அது உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறை தக்பீர் முழங்குவேன். நீங்களும் தக்பீர் முழங்குங்கள். மூன்றாவது முறை நான் தக்பீர் முழங்கியதும் உங்களின் குதிரைப் படை அணியினர், எதிரியை நோக்கிச் செல்லுங்கள். நான் நான்காவது முறை தக்பீர் முழங்கியதும் அனைவரும் முன்னேறிச் சென்று எதிரியை எதிர்கொள்ளுங்கள். ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (ஆற்றலும் வலிமையும் அல்லாஹ்விடமிருந்தே) என்று சொல்லுங்கள்”
லுஹ்ருத் தொழுகை முடிந்தது. முதல் இரண்டு தக்பீர்கள் முழங்கப்பட்டன. முஸ்லிம்களின் படை தயார் நிலையில் நின்றது. மூன்றாவது தக்பீர் முழங்கப்பட்டதும் துவங்கியது யுத்தம். முஸ்லிம் குதிரைப் படையினர் முன்னேறிச் செல்ல, பாரசீகத் தரப்பிலிருந்து குதிரை வீரர்கள் அணி வந்தது. முட்டிக் கொண்டனர் இருதரப்பும்.

37 ஸைத் இப்னுல் கத்தாப்

ஸைத் இப்னுல் கத்தாப்
(زيد بن الخطاب (صقر يوم اليمامة
“உங்கள் மத்தியில் ஒருவர் அமர்ந்துள்ளார். மறுமையில் நரகை அடைவார். அவரது கடைவாய்ப் பல்லின் அளவு உஹது மலையைவிடப் பெரிதாய் இருக்கும்”
ஒருநாள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அனைவரும் அளவளாவிக் கொண்டிருக்க, நபியவர்கள் திடீரென அமைதியடைந்து, பிறகு மேற்கண்டவாறு அறிவித்தார்கள்.


‘இப்பொழுது ஈமான் கொண்டவராக அமர்ந்திருக்கும் ஒருவர், மறுமையில் பெரும் பாவத்துடன் நரகை அடையப் போகிறார். பாவச் சுமையினால் அவரது பல்லின் அளவு மட்டுமே உஹது மலையைவிடப் பெரிதாய் இருக்கும்' என்ற அந்த அறிவிப்பைக் கேட்டதும் முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது அங்கு அமர்ந்திருந்த அனைவருக்கும். ‘யாராக இருக்கும் அது?’ ஒவ்வொருவருக்கும் தம்மைப் பற்றி, தம் ஈமானின் வலுவைப் பற்றி எக்கச்சக்கக் கவலை ஏற்பட்டுப் போனது.

Wednesday, December 03, 2014

35 அம்ரிப்னுல் ஜமூஹ்

அம்ரிப்னுல் ஜமூஹ்
عمرو بن الجموح
பூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு வெகுகாலம் முன்பே அதைப்போன்ற நிகழ்வொன்று உஹதுப் போரின் போது மதீனாவில் நிகழ்ந்தது. கச்சைக் கட்டிக்கொண்டு போருக்கு விரைய தயாராக இருந்தவர் அம்ரிப்னுல் ஜமூஹ் ரலியல்லாஹு அன்ஹு. அபூதல்ஹாவை முதுமை சூழ்ந்திருந்தது என்றால், இந்தத் தோழருக்கு முதுமையும் உடல் ஊனமும்.

தம் தந்தை போருக்குத் தயாராவதைக் கண்ட அவரின் மகன்கள் பதற்றமடைந்தனர். முதுமை, வலுவற்ற உடல்வாகு, கால் ஊனம் போன்ற நிலையில் உள்ள தங்களின் தந்தை ஜிஹாதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர் என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்தது. ஆயினும் அவரது உள்ள உறுதியும் துணிவும் அவர்களுக்குக் கலக்கம் அளித்தன. எப்படியும் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. தந்தையை அணுகி,

36 அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஹராம்

அப்துல்லாஹ் இப்னு ம்ரிப்னு ஹராம்
عبدالله بن عمرو بن حرام
பூக் போர் முடிந்து தம் தோழர்களுடன் மதீனா திரும்பிக் கொண்டிருந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். படையில் தோழர் ஒருவர் மற்றவர்களைவிட மிக மெதுவாய் வந்துகொண்டிருந்தார். அவரைச் சுமந்து கொண்டிருந்த ஒட்டகம் நடக்க முடியாமல் மந்தமாய் நடந்து வந்து கொண்டிருந்தது. தரம் வாய்ந்த ஒட்டகம் வாங்கும் அளவிற்கெல்லாம் அவரிடம் வசதி இல்லை. இருப்பினும் தம்மிடம் உள்ளதை எடுத்துக்கொண்டு நபியவர்களுடன் படையெடுப்பிற்குச் சென்றுவிட்டிருந்தார் அந்தத் தோழர். ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது அந்த ஒட்டகம்.
அவரை நெருங்கிய நபியவர்கள், “யார் அது?” என்று விசாரித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ்”
“ஏன் இவ்வளவு அசமந்தப் பயணம்?”
“அது ஒன்றுமில்லை. எனது ஒட்டகம் நலிவுற்றதாய் இருக்கிறது. வேகமாய்ச் செல்ல மறுக்கிறது”